உள்ளூர் செய்திகள்
மாணவர்களுக்கு தன்னம்பிக்கை பயிற்சி நடைபெற்ற போது எடுத்தப்படம்.

மதுரை நிகில் அறக்கட்டளை சார்பில் மாணவர்களுக்கு தன்னம்பிக்கை பயிற்சி

Published On 2022-04-15 09:39 GMT   |   Update On 2022-04-15 09:39 GMT
மதுரை நிகில் அறக்கட்டளை சார்பில் இலஞ்சி ராமசுவாமிபிள்ளை மேல்நிலைப் பள்ளியில் மாணவர்களுக்கு தன்னம்பிக்கை பயிற்சி அளிக்கப்பட்டது.
தென்காசி:

மதுரை நிகில் அறக்கட்டளை சார்பில் இலஞ்சி ராமசுவாமிபிள்ளை மேல்நிலைப் பள்ளியில் 9-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை படிக்கும் சுமார் 1000 மாணவர்களுக்கு வாழ்வியல் திறன் மேம்பாடு சார்ந்த தன்னம்பிக்கை வளர்த்தல் சார்ந்த தன்னை அறிதல், இலக்குகளை நிர்ணயம் செய்தல் நினைவாற்றல் மற்றும் தகவல் தொடர்பை மேம்படுத்துதல், தலைமைப் பண்பு மற்றும் அரசு பொதுத் தேர்வை எதிர்கொள்வதில் உள்ள அச்சத்தை போக்கிடும் வகையிலான பயிற்சி நடைபெற்றது.

நிகழ்ச்சிக்கு மதுரை நிகில் அறக்கட்டளை நிறுவனரும் பணிநிறைவு பெற்ற ஐ.ஆர்.எஸ் . அதிகாரியுமான சோம நாகலிங்கம் தலைமை தாங்கினார். இலஞ்சி ராமசுவாமி பிள்ளை மேல்நிலை பள்ளியின் உதவி தலைமை விஜயலெட்சுமி  முன்னிலை  வகித்தார். பள்ளி தலைமை ஆசிரியர் ஆறுமுகம்  வரவேற்று பேசினார்.

பயிற்சி ஏற்பாடுகளை இலஞ்சி  சங்கர வித்யாலயா தாளாளர் திருவிலஞ்சி குமரன் செய்திருந்தார்.  நிகழ்ச்சிவீணீ பள்ளி செயலாளர் சண்முகவேலாயுதம் தொடங்கி வைத்தார்.

ஆசிரியர்கள் முத்தையா, சொர்ணசிதம்பரம், அறக்கட்டளை யின் முதன்மை செயல் அலுவலர் வெங்கடாசலம் பயிற்சியின் நோக்கம் குறித்து செயல் விளக்கமளித்து மாணவர்களை உற்சாக மூட்டினார்.

கருத்தாளர்களாக மருத்துவர், பொறியாளர் , ஆடிட்டர் , பேராசிரியர்கள், பல்துறை சார்ந்த வல்லுநர்கள் உட்பட 25 பேர் செயல்பட்டனர். மாணவர்கள் மிகுந்த உற்சாகத்துடன் பயிற்சி பெற்றனர்.

பயிற்சியில் பங்கேற்ற மாணவர்கள் 1000 பேருக்கும் பயிற்சி புத்தகத்தினை தலைமை பயிற்சியாளர் நிகில் சுரேஷ் வழங்கினார். ஓவிய ஆசிரியர் கணேசன் நினைவு பரிசு வழங்கினார். அறிவியல் ஆசிரியர் சுரேஷ்குமார் நன்றி கூறினார்.
Tags:    

Similar News