செய்திகள்
கே.என்.நேரு

சென்னை நகர் குடிநீர் பிரச்சனையை தீர்க்க விரிவான திட்டம்- கே.என்.நேரு தகவல்

Published On 2021-08-24 08:27 GMT   |   Update On 2021-08-24 08:27 GMT
சென்னை மாநகரில் குடிநீர் தேவை நாள் ஒன்று 1,150 மில்லியன் லிட்டராக உள்ளது என அமைச்சர் கே.என்.நேரு தெரிவித்தார்.
சென்னை:

சட்டசபையில் இன்று நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை மானிய கோரிக்கையை அமைச்சர் கே.என்.நேருவும், ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறை மானிய கோரிக்கையை அமைச்சர் பெரிய கருப்பனும் தாக்கல் செய்தனர்.

இந்த விவாதத்தில் பங்கேற்ற எதிர்க்கட்சி கொறடா எஸ்.பி.வேலுமணி பேசும்போது, சென்னை மாநகரில் குடிநீர் பிரச்சனையை தீர்க்க எங்கள் ஆட்சியில் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. அதனை இன்றைய ஆட்சியும் தொடர்ந்து மேற்கொள்ள வேண்டும் என்று குறிப்பிட்டார்.

இதற்கு பதில் அளித்து கே.என்.நேரு பேசியதாவது:-

சென்னை மாநகரில் குடிநீர் தேவை நாள் ஒன்று 1,150 மில்லியன் லிட்டராக உள்ளது. ஆனால் தற்போது 830 முதல் 840 மில்லியன் லிட்டர் குடிநீர் மட்டுமே வழங்கப்படுகிறது. இதனை கருத்தில் கொண்டு குடிநீர் பிரச்சனையை தீர்க்க தேவையான நடவடிக்கைகளை எடுக்க முதல்-அமைச்சர் அறிவுறுத்தியுள்ளார்.

சென்னையை சுற்றி பாசனத்துக்கு பயன்படாமல் 500 ஏரிகள் உள்ளன. பொதுப்பணித்துறை அனுமதி பெற்று இந்த ஏரிகளில் தேவையான தண்ணீரை தேக்கி வைத்து குடிநீருக்கு பயன்படுத்தவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.

சென்னையில் குடிநீர் பிரச்சனையை தீர்க்க விரிவான திட்ட அறிக்கை தயாரித்து வருகிறோம்.

இவ்வாறு அவர் கூறினார்.
Tags:    

Similar News