செய்திகள்
ஸ்டீபன் பிளமிங்

சிஎஸ்கே-வுக்கு பெரிய இழப்பு: இருவரும் அடுத்த போட்டிக்கும் தயாராகமாட்டார்கள்- ஸ்டீபன் பிளமிங்

Published On 2021-04-11 10:48 GMT   |   Update On 2021-04-11 10:48 GMT
டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிக்கெதிராக 188 ரன்கள் அடித்தும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் தோல்விக்கு பந்து வீச்சுதான் முக்கிய காரணம் என விமர்சனம் வைக்கப்பட்டுள்ளது.
ஐபிஎல் கிரிக்கெட்டில் மும்பை வான்கடே மைதானத்தில் நேற்று நடைபெற்ற ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ்- டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின.

முதலில் பேட்டிங் செய்த சென்னை சூப்பர் கிங்ஸ் 188 ரன்கள் விளாசியது. ஆனால் டெல்லி அணி 18.4 ஓவரிலேயே 3 விக்கெட்டை மட்டுமே இழந்து இலக்கை எட்டியது. இதனால் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 7 விக்கெட் வித்தியசத்தில் தோல்வியைத் தழுவியது.

சென்னை அணியில் தீபக் சாஹர், ஷர்துல் தாகூர், பிராவோ, சாம் கர்ரன் ஆகிய நான்கு வேகப்பந்து வீச்சாளர்கள் இடம் பிடித்தினர். இவர்களில் எவரும் 140 கிலோ மீட்டருக்கு அதிகமான வேகத்தில் பந்து வீசக்கூடியவர்கள் அல்ல. அதேபோல் அடிக்கடி பவுன்சர் வீசக்கூடியவர்ளும் இல்லை. இந்த இரண்டு சிறப்பம்சம் கொண்ட பந்து வீச்சாளருடன் சென்னை களம் இறங்க வேண்டும் என ரசிகர்கள் கருத்து கூறி வருகிறார்கள்.



சென்னையில் தென்ஆப்பிரிக்காவின் லுங்கி நிகிடி, ஜேசன் பெரேண்டர்ப் ஆகிய வேகப்பந்து வீச்சாளர்கள் உள்ளனர். ஹசில்வுட் திடீரென விலகியதால் சென்னை அணிக்கு சிக்கல் ஏற்பட்டது.

லுங்கி நிகிடி தென்ஆப்பிரிக்காவில் இருந்து வந்து கோரன்டைன் நாட்களை முடிக்கவில்லை. ஜேசன் பெரேண்டர்ப்-க்கும் அதே நிலைதான். அதனால் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிக்கெதிரான அடுத்த போட்டியிலும் இருவரும் பங்கேற்கமாட்டார்கள்.



நிகிடி விரைவில் வருவார். அதனைத் தொடர்ந்து பெரேண்டர்ப் அணியில் இணைவார். பந்து வீச்சில் அந்த இடத்தை கவனிக்க வேண்டும். தற்போது இந்திய பந்து வீச்சாளர்கள், சாம் கர்ரன் ஆகியோர் மீது கவனம் செலுத்துகிறோம் என சென்னை சூப்பர் கிங்ஸ் தலைமை பயிற்சியாளர் ஸ்டீபன் பிளமிங் தெரிவித்துள்ளார்.
Tags:    

Similar News