தொழில்நுட்பம்
ட்விட்டர்

கொரோனா தொற்றை எதிர்கொள்ள ரூ. 110 கோடி நன்கொடை வழங்கும் ட்விட்டர்

Published On 2021-05-11 10:05 GMT   |   Update On 2021-05-11 10:05 GMT
இந்தியாவில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தி வரும் கொரோனா இரண்டாவது அலையை எதிர்கொள்ள ட்விட்டர் நிறுவனம் நிவாரண உதவி வழங்குவதாக அறிவித்து இருக்கிறது.


இந்தியாவில் ஏற்பட்டு இருக்கும் கொரோனா தொற்றின் இரண்டாவது அலை பாதிப்பை எதிர்கொள்ள ரூ. 110 கோடி வழங்குவதாக ட்விட்டர் தெரிவித்து உள்ளது. முன்னதாக கூகுள், மைக்ரோசாப்ட், சியோமி போன்ற நிறுவனங்கள் இதேபோன்று நிவாரண உதவிகளை அறிவித்தன.



மூன்று தொண்டு நிறுவனங்களுக்கு நிதி வழங்குவதாக ட்விட்டர் நிறுவன தலைமை செயல் அதிகாரி ஜாக் டார்சி தனது சமூக வலைதள அக்கவுண்டில் தெரிவித்தார். அதன்படி CARE, Aid India மற்றும் Sewa International USA போன்ற நிறுவனங்களுக்கு நிதி வழங்கப்படுகிறது. 

நிதி தொகை தற்காலிக கொரோனா மையங்களை கட்டமைத்தல், ஆக்சிஜன் வழங்குதல், பிபிஐ கிட் மற்றும் இதர தேவையான உபகரணங்களை வழங்க பயன்படுத்தப்படுகிறது. இத்துடன் அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொள்ள வேண்டிய அவசியம் பற்றி எடுத்துரைக்க ட்விட்டர் திட்டமிட்டுள்ளது.
Tags:    

Similar News