உள்ளூர் செய்திகள்
மோரூர் மேற்கு ஊராட்சியில் கோவில் நிலங்களை பார்வையிட்ட அதிகாரிகள்.

சங்ககிரி அருகே கோவில் நிலங்களில் அரசு அதிகாரிகள் ஆய்வு

Published On 2022-01-11 09:10 GMT   |   Update On 2022-01-11 09:10 GMT
சங்ககிரி அருகே கோவிலுக்கு சொந்தமான நிலங்களை அதிகாரிகள் அளவீடு செய்து ஆய்வு நடத்தினர்.
சங்ககிரி:

சேலம் மாவட்டம், சங்ககிரி ஊராட்சி ஒன்றிய உட்பட்ட மோரூர் மேற்கு அருகே தாசநாயக்கன்பாளையம் மாரியம்மன்கோயில், புள்ளிபாளையம் ஏணிபாலி மன்னாத சுவாமிகோவில், தாசநாயக்கன்பாளையம் சஞ்சீவிராய பெருமாள் கோவில் ஆகிய கோயில்களுக்கு சொந்தமான 12.46 ஏக்கர் பரப்பளவில் பல கோடி மதிப்புள்ள விவசாய நிலங்கள் உள்ளன. 

இந்த நிலங்களை நேற்று சங்ககிரி மண்டல துணை தாசில்தார் ஜெயக்குமார், வருவாய் ஆய்வாளர் அன்சாரிகான், கிராம நிர்வாக அலுவலர் குணசேகரன், திருத்தொண்டரகள் சபை நிறுவனத் தலைவர் ராதாகிருஷ்ணன் ஆகியோர் பார்வையிட்டு ஆய்வு செய்தனர். 

அப்போது கோவில் சொத்துக்களில் உள்ள பாதையை சில தனிநபர்கள் பயன்படுத்தி வருகிறார்கள். அவர்கள் மீது நடவடிக்கை எடுப்பதுடன் ஆக்கிரமிப்புகள் அகற்றப்படும் என்று திருத்தொண்டர்கள் சபை நிறுவனத் தலைவர் ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.
Tags:    

Similar News