வழிபாடு
சி.முட்லூரில் கன்னி திருவிழாவையொட்டி சிலைகளை சுமந்து பக்தர்கள் ஊர்வலமாக சென்ற காட்சி.

சி.முட்லூரில் கன்னி திருவிழா: சிலைகளை சுமந்து ஊர்வலமாக சென்ற பக்தர்கள்

Published On 2022-01-27 07:33 GMT   |   Update On 2022-01-27 07:33 GMT
சி.முட்லூரில் கன்னி திருவிழா நடந்தது. இதில் சிலைகளை சுமந்து பக்தர்கள் ஊர்வலமாக சென்றனர். சிறப்பு வழிபாடு நடத்திய பின்னர், சாமி சிலைகளை தண்ணீரை கரைத்து வணங்கினர்.
சிதம்பரம் அருகே சி.முட்லூரில் ஆண்டுதோறும் கன்னி திருவிழா கொண்டாடப்பட்டு வருகிறது. அதாவது திருமணமாகாத ஆண்கள், திருமணமாகாத பெண்கள் கன்னி சிலைகளை செய்து வழிபடுவார்கள். மேலும் குழந்தை வரம் கேட்டும் வழிபடுவார்கள். அவ்வாறு வழிபட்டால் பக்தர்களின் கோரிக்கை நிறைவேறும் என்பது ஐதீகம். வழக்கம்போல் இந்த ஆண்டும் பொங்கல் விழா முடிந்து கரிநாள் அன்று கன்னி திருவிழா தொடங்கியது. கடந்த 10 நாட்களாக பக்தர்கள் கன்னி சிலைகளை செய்து வழிபட்டனர்.

10-வது நாளாக நேற்று கன்னி சிலைகளுடன் பக்தர்கள், மேளதாளத்துடன் ஊர்வலமாக வெள்ளாற்றுக்கு சென்றனர். அங்கு சிறப்பு வழிபாடு நடத்திய பின்னர், சாமி சிலைகளை தண்ணீரை கரைத்து வணங்கினர். இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். கொரோனா கட்டுப்பாடுகளை மீறி ஒரே நேரத்தில் 700-க்கும் மேற்பட்டோர் கூடினர். உடனே போலீசார் விரைந்து சென்று சமூக இடைவெளியை பின்பற்றவும், முக கவசம் அணியவும் வலியுறுத்தினர். ஆனால் இதை யாரும் கேட்கவில்லை. இதனால் கொரோனா நோய்த்தொற்று பரவும் அபாயமும் ஏற்பட்டது.
Tags:    

Similar News