ஆன்மிகம்
ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் ரெங்கநாச்சியார் ஊஞ்சல் உற்சவம்

ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் ரெங்கநாச்சியார் ஊஞ்சல் உற்சவம் நிறைவு

Published On 2020-11-21 09:12 GMT   |   Update On 2020-11-21 09:12 GMT
ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவில் ஊஞ்சல் உற்சவத்தின் நிறைவு நாளில் ரெங்கநாச்சியார் மூலஸ்தானத்திலிருந்து புறப்பட்டு ஊஞ்சல் மண்டபம் வந்தடைந்தார். அங்கு ரெங்கநாச்சியார் ஊஞ்சல் உற்சவம் கண்டருளினார்.
ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் நடைபெறும் ரெங்கநாச்சியார் ஊஞ்சல் உற்சவம் மிகவும் சிறப்பு வாய்ந்தது. இந்நிகழ்வு டோலோத்ஸவம் என்றும் அழைக்கப்படுகிறது. ரெங்கநாச்சியார் ஊஞ்சல் உற்சவம் கடந்த 14-ந்தேதி தொடங்கி நேற்று வரை 7 நாட்கள் நடைபெற்றது.

ஊஞ்சல் உற்சவத்தின் நிறைவு நாளான நேற்று மாலை 5.30 மணிக்கு ரெங்கநாச்சியார் மூலஸ்தானத்திலிருந்து புறப்பட்டு மாலை 6 மணிக்கு ஊஞ்சல் மண்டபம் வந்தடைந்தார். அங்கு ரெங்கநாச்சியார் ஊஞ்சல் உற்சவம் கண்டருளினார்.

பின்னர் இரவு 9.30 மணிக்கு மூலஸ்தானம் சென்றடைந்தார். விழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் அறங்காவலர் குழுத்தலைவர் வேணுசீனிவாசன், இணை ஆணையர் ஜெயராமன், உதவி ஆணையர் கந்தசாமி, அறங்காவலர்கள் மற்றும் பணியாளர்கள் செய்திருந்தனர்.
Tags:    

Similar News