செய்திகள்
கொரோனா வைரஸ்

தமிழகத்தில் 20 மாவட்டங்களில் கொரோனா தாக்கம் குறைந்தது

Published On 2021-01-11 08:52 GMT   |   Update On 2021-01-11 10:27 GMT
தமிழகத்தில் 20 மாவட்டங்களில் கொரோனா தாக்கம் மிகவும் குறைந்துள்ளது. 20 மாவட்டங்களிலும் 10-க்கும் குறைவானவர்களே கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
சென்னை:

இந்தியாவில் கொரோனா நோய்த்தொற்று கட்டுக்குள் வந்து கொண்டு இருக்கிறது. அதேநேரத்தில் தமிழகத்திலும் கொரோனா பாதுகாப்பு சமீபகாலமாக மிகவும் குறைந்து வருகிறது. கடந்த 3 நாட்களாக தமிழகத் தில் கொரோனா பாதிப்பு மிக மிக குறைந்துள்ளது.

தமிழகத்தில் நேற்று ஒரே நாளில் 63 ஆயிரத்து 794 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப் பட்டது. அதில் 724 பேர் மட்டுமே கொரோனாவால் பாதிக்கப்பட்டு உள்ளனர்.

தமிழகத்தில் 20 மாவட்டங்களில் கொரோனா தாக்கம் மிகவும் குறைந்துள்ளது. 20 மாவட்டங்களிலும் 10-க்கும் குறைவானவர்களே கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

அரியலூர், ராமநாதபுரம், விழுப்புரம், கள்ளக்குறிச்சி ஆகிய மாவட்டங்களில் தலா 2 பேர் மட்டுமே கொரோனாவால் பாதிக்கப்பட்டிருந்தனர். பெரம்பலூர் மாவட் டத்தில் நேற்று ஒருவர் கூட கொரோனாவால் பாதிக்கப்படவில்லை.

நேற்று கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களில் 8 பேர் வெளி இடங்களில் இருந்து வந்த பயணிகள் ஆவர். அவர்களில் 4 பேர் வெளிநாடுகளில் இருந்து வந்தவர்கள். 2 பேர் மேற்கு வங்காளத்தில் இருந்தும், ஒருவர் ஒடிசாவில் இருந்தும், ஒருவர் பீகாரில் இருந்தும் வந்த பயணிகள் ஆவர்.

தமிழகத்தில் கொரோனா பாதித்தவர்களின் மொத்த எண்ணிக்கை 8 லட்சத்து 26 ஆயிரத்து 261 பேர். இதில் தற்போது 7,164 பேர் மட்டுமே சிகிச்சையில் உள்ளனர். நேற்று ஒரே நாளில் 857 பேர் சிகிச்சை பெற்று வீடு திரும்பினர். இதுவரை மொத்தம் 8 லட்சத்து 6 ஆயிரத்து 875 பேர் சிகிச்சை பெற்று வீடு திரும்பியுள்ளனர்.

நேற்று ஒரேநாளில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு இருந்த 7 பேர் பலியாகி உள்ளனர். சென்னையில் ஒருவரும், கோவை மாவட்டத்தில் ஒருவரும், ராமநாதபுரம் மாவட்டத்தில் 2 பேரும், தஞ்சாவூர் மாவட் டத்தில் 2 பேரும், திருவள்ளூர் மாவட்டத்தில் ஒருவரும் இறந்துள்ளனர்.

இறந்தவர்கள் அனைவருக்கும் வேறு நோய்களும் இருந்தன. இறந்தவர் களில் 4 பேருக்கு நீரிழிவு நோய் இருந்தது. 2 பேருக்கு நாள்பட்ட கல்லீரல் நோய் இருந்தது. மற்றொருவருக்கு நுரையீரல் காசநோய் இருந்தது. மற்றொருவர் சிறுநீரக நோயால் பாதிக்கப்பட்டவர்.

சென்னையில் நேற்று ஒரே நாளில் 208 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். 240 பேர் குணமடைந்து வீடு திரும்பினார்கள். தற்போது 2182 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். சென்னையில் இதுவரை 2 லட்சத்து 27 ஆயிரத்து 800 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

கடந்த நவம்பர் 25-ந்தேதி முதல் டிசம்பர் 23-ந்தேதி வரை இங்கிலாந்தில் இருந்து 2,300 பயணிகள் வந்துள்ளனர். அவர்களில் 2,146 பேர் கண்டுபிடிக்கப்பட்டு சோதனை செய்யப்பட்டது. இதில் 24 பேருக்கு கொரோனா பாதிப்பு இருந்தது. மற்றவர்களை கண்டுபிடிக்கும் பணிகள் நடப்பதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Tags:    

Similar News