தொழில்நுட்பம்
எல்ஜி விங்

எல்ஜி விங் டூயல் ஸ்கிரீன் ஸ்மார்ட்போன் வெளியீட்டு விவரம்

Published On 2020-09-03 07:18 GMT   |   Update On 2020-09-03 07:21 GMT
எல்ஜி நிறுவனத்தின் புதிய விங் டூயல் ஸ்கிரீன் ஸ்மார்ட்போனின் வெளியீட்டு விவரங்களை தொடர்ந்து பார்ப்போம்.


எல்ஜி நிறுவனம் தனது டூயல் ஸ்கிரீன் ஸ்மார்ட்போன் அறிமுக விவரங்களை வெளியிட்டுள்ளது. எக்ஸ்புளோரர் பிராஜக்ட் என அழைக்கப்படும் புதிய ஸ்மார்ட்போனின் வடிவமைப்பை அம்பலப்படுத்தும் 30 நொடிகள் ஓடும் வீடியோவை எல்ஜி வெளியிட்டு இருக்கிறது.

புதிய திட்டத்தின் மூலம் இதுவரை அறியப்படாத பகுதிகளில் பயனர் அனுபவத்தை விரிவுப்படுத்தும் வகையில் இருக்கும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது. முற்றிலும் புதுவித வடிவமைப்புகளில் வித்தியாச அனுபவத்தை வழங்கும் வகையில் எக்ஸ்புளோரர் பிராஜக்ட் கவனம் செலுத்தும். 



டூயல் ஸ்கிரீனுக்கென எல்ஜி நிறுவனம் ரேவ், ஃபிட்கோ, டுபி மற்றும் நேவர் போன்ற நிறுவனங்களுடன் கூட்டு சேர்ந்துள்ளது. இத்துடன் குவால்காம் நிறுவனத்துடன் மீண்டும் இணைந்துள்ளது.

முந்தைய தகவல்களின் படி புதிய சாதனத்தில் 6.8 இன்ச் பிரைமரி டிஸ்ப்ளே, 4 இன்ச் சிறிய டிஸ்ப்ளே, 64 எம்பி பிரைமரி கேமரா, ஸ்னாப்டிராகன் 765ஜி அல்லது 768ஜி பிராசஸர் மற்றும் 5ஜி வசதி கொண்டிருக்கும் என கூறப்படுகிறது.

எல்ஜி எக்ஸ்புளோரர் பிராஜக்ட் செப்டம்பர் 14 ஆம் தேதி இரவு 7.30 மணிக்கு அறிவிக்கப்பட இருக்கிறது. இந்த நிகழ்வு எல்ஜி மொபைல் அதிகாரப்பூர்வ யூடியூப் மற்றும் பேஸ்புக் பக்கங்களில் நேரலை செய்யப்படுகிறது.
Tags:    

Similar News