உள்ளூர் செய்திகள்
FILE PHOTO

தொகுப்பூதிய அடிப்படையில் குழந்தைகள் பாதுகாப்பு பணியாளர்கள் நியமனம்

Published On 2022-01-12 09:56 GMT   |   Update On 2022-01-12 09:56 GMT
புதுக்கோட்டை மாவட்டத்தில் குழந்தைகள் பாதுகாப்பு பணியாளர் பணியிடம் தொகுப்பூதிய அடிப்படையில் நியமனம் செய்யப்படவுள்ளதாக கலெக்டர் தெரிவித்துள்ளார்.
புதுக்கோட்டை:

புதுக்கோட்டை மாவட்ட கலெக்டர் கவிதா ராமு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:

தமிழ்நாடு அரசு, சமூக பாதுகாப்புத்துறை, ஒருங்கிணைந்த குழந்தைகள் பாதுகாப்பு திட்டத்தின் கீழ் புதுக்கோட்டை மாவட்டத்தில் செயல்பட்டு வரும் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகில் காலிப்பணியிடமாக உள்ள 1 புறத்தொடர்பு பணியாளர் பணியிடத்தினை ஒப்பந்த ஊதியம் மாதம் ரூ.8,000&ம் தொகுப்பூதிய அடிப்படையில் நியமனம் செய்திட புதுக்கோட்டை மாவட்டத்தைச் சேர்ந்தவர்களிடமிருந்து மட்டும் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.

10 ம் வகுப்பு அல்லது 12 ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். குழந்தை சார்ந்த படிப்பு பிரிவில் சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும். குழந்தை தொடர்பான பணியில் 1 வருட பணி அனுபவம் பெற்றியிருத்தல் வேண்டும்.

40 வயதிற்கு மேற்பட்டவர்களாக இருத்தல் கூடாது. மேற்குறிப்பிட்ட தகுதியுடைய விண்ணப்பதாரர்கள் இணையதள முகவரியில் விண்ணப்பத்தினை பதிவிறக்கம் செய்து, பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்ப படிவத்தினை அனைத்து சான்றிதழ்களின் நகல்களுடன் இணைத்து நேரிலோ அல்லது தபால் மூலமாகவோ 28.01.2022 அன்று மாலை 5.30 மணிக்குள் வந்து சேருமாறு அனுப்பி வைத்தல் வேண்டும்.

28.01.2022&க்கு பிறகு பெறப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படமாட்டாது என தெரிவிக்கப்படுகிறது.

விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய முகவரி: மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர், மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு, மாவட்ட முன்னாள் படை வீரர்கள் நல அலுவலக வளாகம்,  கல்யாணராமபுரம் 1 ஆம் வீதி,  திருக்கோகர்ணம் அஞ்சல், புதுக்கோட்டை&622002. தொலைபேசி எண் 04322 221266 மற்றும் அலைபேசி எண் 80564 31053 ஆகும் என மாவட்ட கலெக்டர் கவிதா ராமு தெரிவித்துள்ளார்
Tags:    

Similar News