ஆன்மிகம்
மகாளய அமாவாசை

மறந்தவர்களுக்கு மகாளய அமாவாசை விரதம்

Published On 2020-09-16 03:31 GMT   |   Update On 2020-09-16 03:31 GMT
இதுவரை திதி கொடுப்பதற்கு மறந்தவர்கள் கூட விரதம் இருந்து (நாளை) மகாளய அமாவாசை அன்று திதி கொடுத்தால் பித்ருக்களின் ஆசியைப் பெறமுடியும்
அறைக்குள் விளக்காகி, வீட்டில் படமாயிருக்கும் நம் முன்னோர்களை வழிபட உகந்த நாள் அமாவாசை. எல்லா மாதங்களிலும் ‘அமாவாசை’ வந்தாலும், ஆடி மாதம் வரும் அமாவாசையை ‘ஆடி அமாவாசை’ என்றும், தை மாதம் வரும் அமாவாசையை ‘தை அமாவாசை’ என்றும், புரட்டாசி மாதம் வரும் அமாவாசையை ‘மகாளய அமாவாசை’ என்றும் சொல்வார்கள்.

இதில் மகாளய அமாவாசை, வரும் புரட்டாசி மாதம் 1-ந் தேதி (17.9.2020) வியாழக்கிழமை வருகின்றது. அன்றையதினம் விரதம் இருந்து முன்னோர்களை நினைத்து வழிபடுவதன் மூலமும், பித்ருக்களுக்கு திதி கொடுப்பதன் மூலமும் முன்னேற்றங்கள் வந்துசேரும். ‘மறந்தவர்களுக்கு மகாளய அமாவாசை’ என்று சொல்வார்கள்.

இதுவரை திதி கொடுப்பதற்கு மறந்தவர்கள் கூட விரதம் இருந்து மகாளய அமாவாசை அன்று திதி கொடுத்தால் பித்ருக்களின் ஆசியைப் பெறமுடியும். முன்னோர்களைப் போற்றுங்கள். முன்னேற்றங்களைப் பெற்று வாழ முடியும்.
Tags:    

Similar News