செய்திகள்
கிணற்றில் விழுந்த ஆடு, பசுமாடு உயிருடன் மீட்பு

தஞ்சையில் கிணற்றில் விழுந்த ஆடு-பசுமாடு உயிருடன் மீட்பு

Published On 2021-02-19 10:20 GMT   |   Update On 2021-02-19 10:20 GMT
தஞ்சையில் கிணற்றில் விழுந்த ஆடு, பசு மாட்டை தீயணைப்பு துறையினர் உயிருடன் மீட்டனர்.
தஞ்சாவூர்:

தஞ்சை ராஜப்பா நகர் செங்கமல நாச்சியார் கோவில் தெருவை சேர்ந்தவர் குமார். இவருக்கு சொந்தமான ஆடு அப்பகுதியில் மேய்ந்து கொண்டிருந்தது. அப்போது 80 அடி கிணற்றில் ஆடு தவறி விழுந்து விட்டது.

இதுகுறித்து தகவல் அறிந்த தஞ்சை தீயணைப்பு படை வீரர்கள் அங்கு விரைந்து சென்று கிணற்றில் விஷவாயு எதுவும் இருக்கிறதா என சோதனை செய்தனர். விஷ வாயு இல்லை என தெரிந்த பின்பு தீயணைப்பு வீரர் ஒருவர் கயிறு மூலமாக கிணற்றுக்குள் இறங்கி ஆட்டை கயிறு மூலமாக உயிருடன் மீட்டனர்.

அதேபோல் தஞ்சையை அடுத்த விளார் சாலை கீழத் தெருவை சேர்ந்த தனசேகர் என்பவருக்கு சொந்தமான பசுமாடு 30 அடி கிணற்றில் விழுந்து விட்டது. அந்தக் கிணற்றில் தண்ணீர் இல்லை. இதையறிந்த தீயணைப்பு துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று கயிறு மூலம் பசு மாட்டை உயிருடன் மீட்டனர்.
Tags:    

Similar News