உள்ளூர் செய்திகள்
சாத்தூர் வைப்பாற்றில் எழுந்தருருளிய கள்ளழகரை பக்தர்கள் வழிபாடு செய்தனர்.

சாத்தூர் வைப்பாற்றில் கள்ளழகர் இறங்கினார்

Published On 2022-04-17 09:42 GMT   |   Update On 2022-04-17 09:42 GMT
சாத்தூர் வைப்பாற்றில் கள்ளழகர் இறங்கினார். திறளான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.
சாத்தூர்

விருதுநகர் மாவட்டம் சாத்தூரில் சித்ரா பவுர்ணமி நாளன்று கள்ளழகர் வைப்பாற்றில் இறங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. வெங்கடாஜலபதி குதிரை வாகனத்தில் எழுந்தருளி னார். அதிகாலை முதல் சிறப்பு அலங்காரம் மற்றும் தீபாராதனை, சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. இதில் சாத்தூர் மற்றும் அதன் சுற்றியுள்ள கிராமங் களில் இருந்து ஏராளமான பக்தர்கள்  பங்கேற்று தரிசனம் செய்தனர்.

பின்னர் வெங்கடாஜலபதி சாத்தூரில் வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.  பின்னர் சாத்தூர் வைப்பாற்றில் பச்சைப்பட்டு உடுத்தி கோவிந்தா கோபாலா என பக்தர்களின் கோஷம் களுக்கிடையே அழகர் ஆற்றில் இறங்கினார். அங்கு மருத்துவ குல சங்கத்தின் சார்பில் அமைக்கப்பட்ட மண்டகப்படியில் பக்தர் களுக்கு அருள்பாலித்தார். 

பின்னர் பெரியகொல்லப் பட்டி மற்றும் அய்யம்பட்டி கிராமத்தின் சார்பில் அமைக்கப்பட்டிருந்த மண்டகப்படியில் அழகர் பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.
Tags:    

Similar News