தொழில்நுட்பம்
சாம்சங் கேலக்ஸி டேப் எஸ்7

ஜூன் மாதம் அறிமுகமாகும் கேலக்ஸி டேப் ஏ7 லைட்

Published On 2021-03-29 11:06 GMT   |   Update On 2021-03-29 11:06 GMT
சாம்சங் நிறுவனத்தின் புதிய கேலக்ஸி டேப் ஏ7 லைட் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி உள்ளது.


சாம்சங் நிறுவனம் கேலக்ஸி டேப் ஏ7 லைட் மாடலை  ஜூன் மாத வாக்கில் அறிமுகம் செய்யும் என தகவல் வெளியாகி உள்ளது. புதிய கேலக்ஸி டேப் ஏ7 லைட் பட்ஜெட் ரக மாடல் என்றும் இதில் எல்சிடி பேனல் வழங்கப்படும் என்றும் கூறப்படுகிறது.

சிறப்பம்சங்களை பொருத்தவரை புதிய கேலக்ஸி டேப் ஏ7 லைட் மாடலில் 8.4 இன்ச் டிஸ்ப்ளே, எல்சிடி பேனல், ஒற்றை பிரைமரி கேமரா, செல்பி கேமரா, பவர் பட்டன், பக்கவாட்டுகளில் வால்யூம் ராக்கர், கைரேகை சென்சார் உள்ளிட்டவை வழங்கப்படலாம். 



புதிய கேலக்ஸி டேப் ஏ7 லைட் மாடலில் ஹீலியோ பி22டி பிராசஸர், 3 ஜிபி ரேம் உள்ளிட்ட அம்சங்கள் வழங்கப்படும் என தெரிகிறது. இந்த டேப்லெட்டில் வழங்கப்பட இருக்கும் கேமரா சென்சார் விவரங்கள் இதுவரை அறியப்படவில்லை. மேலும் இதில் 5000 எம்ஏஹெச் பேட்டரி, பாஸ்ட் சார்ஜிங் வசதி, ப்ளூடூத் 5, வைபை, 4ஜி எல்டிஇ, ஆண்ட்ராய்டு 11 வழங்கப்படலாம்.

புதிய டேப் ஏ7 லைட் மாடலுடன் கேலக்ஸி டேப் எஸ்7 லைட் அறிமுகம் செய்யப்படும் என கூறப்படுகிறது. இதில் 5ஜி, 4ஜி எல்டிஇ, வைபை, 12.4 இன்ச் எல்சிடி டிஎப்டி டிஸ்ப்ளே, ஸ்னாப்டிராகன் 750ஜி பிராசஸர் வழங்கப்படலாம்.
Tags:    

Similar News