செய்திகள்
கொரோனா தடுப்பூசி

கொரோனா தடுப்பு மருந்து பற்றாக்குறை - மத்திய அரசை கண்டித்து காங்கிரஸ் இன்று போராட்டம்

Published On 2021-04-11 23:09 GMT   |   Update On 2021-04-11 23:09 GMT
கொரோனா தடுப்பு மருந்து பற்றாக்குறை விவகாரத்தில் மத்திய அரசை கண்டித்து இன்று காங்கிரஸ் போராட்டத்தில் ஈடுபட உள்ளது.
மும்பை:

மகாராஷ்டிரா மாநிலத்தில் 2-வது கொரோனா அலை அசுர வேகத்தில் பரவி வருகிறது. மேலும் கொரோனா தடுப்பு மருந்து தட்டுப்பாடும் ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக மும்பையில் பல தடுப்பூசி மையங்கள் மூடப்பட்டுள்ளன.

இந்நிலையில் இந்த விவகாரத்தில் மத்திய அரசைக் கண்டித்து காங்கிரஸ் கட்சியினர் இன்று மாநிலம் தழுவிய போராட்டத்தில் ஈடுபட உள்ளனர்.

அவர்கள் தடுப்பூசி பற்றாக்குறை காரணமாக மூடப்பட்ட மையங்கள் முன் தட்டுகளை தட்டியும், மணி அடித்தும் மத்திய அரசுக்கு எதிராக போராட்டம் நடத்த உள்ளனர்.



இதுதொடர்பாக, மாநில காங்கிரஸ் தலைவர் நானா படோலே கூறுகையில், மருந்து இல்லாமல் பல மையங்கள் மூடப்பட்டுள்ள நிலையில் தடுப்பூசி திருவிழாவை எப்படி கொண்டாட முடியும்? தடுப்பு மருந்து விவகாரத்தில் அரசியல் செய்யும் மத்திய அரசுக்கு எதிராக தட்டுகளை தட்டியும், மணி அடித்தும் போராட்டத்தில் ஈடுபட உள்ளோம்.

நாட்டிலேயே மகாராஷ்டிராவில் தான் அதிகளவில் தடுப்பு மருந்து செலுத்தப்பட்டுள்ளது. ஆனால் மத்திய அரசு மாநிலத்திற்கு போதுமான மருந்தை கொடுக்கவில்லை. நாட்டில் போதுமான அளவு தடுப்பு மருந்து உற்பத்தி செய்யப்படுகிறது. ஆனால் அவை பாகிஸ்தான் உள்பட மற்ற நாடுகளுக்கு இலவசமாக ஏற்றுமதி செய்யப்படுகிறது என தெரிவித்தார்.
Tags:    

Similar News