செய்திகள்
பிரதமர் மோடி

இந்தியாவில் ஒரே நாளில் 2.25 கோடி தடுப்பூசி செலுத்தி புதிய சாதனை

Published On 2021-09-17 20:29 GMT   |   Update On 2021-09-17 20:29 GMT
இந்தியா முழுவதும் ஒரே நாளில் 2.25 கோடிக்கும் அதிகமான கொரோனா தடுப்பூசிகள் செலுத்தி புதிய சாதனை படைக்கப்பட்டுள்ளது.
புதுடெல்லி:

பிரதமர் நரேந்திர மோடியின் 71-வது பிறந்த நாள் கொண்டாடப்பட்டது. பிரதமரின் பிறந்த நாளை முன்னிட்டு கொரோனா தடுப்பூசி எண்ணிக்கையில் சாதனை நிகழ்த்த பா.ஜ.க. திட்டமிட்டது. அதன்படி நாடு முழுக்க 2.25 கோடி கொரோனா தடுப்பூசிகளை செலுத்தி சாதனை படைத்துள்ளது சுகாதாரத்துறை அமைச்சகம்.

ஒரே நாளில் 2.25 கோடிக்கும் அதிகமான டோஸ்கள் வழங்கப்படுவது நமது நாட்டில் இதுவே முதல் முறையாகும்.



ஆகஸ்ட் 31 அன்று இந்தியா 1.30 கோடி டோஸ்களை ஒரே நாளில் செலுத்தியது. இதுவே அதிகபட்ச ஒற்றை நாள் தடுப்பூசி அளவாக இதுவரை இருந்து வந்தது.

முன்னதாக, ஆகஸ்ட் 27 அன்று முதல் முறையாக ஒரே நாளில் ஒரு கோடி டோஸ் தடுப்பூசி என்ற மைல் கல்லை இந்தியா எட்டியது. இப்போது அது 2.25  கோடியாக உயர்ந்துள்ளது.

Tags:    

Similar News