செய்திகள்
வெள்ளை பூசணி

ஆயுதபூஜையை முன்னிட்டு வெள்ளை பூசணிகள் குவிப்பு

Published On 2020-10-22 08:27 GMT   |   Update On 2020-10-22 08:27 GMT
ஆயுதபூஜை விழா வருகிற 25-ந் தேதி முதல் கொண்டாடப்படுகிறது. இதை முன்னிட்டு ஈரோட்டில் பல்வேறு பகுதிகளிலும் வெள்ளை பூசணிகள் கொண்டு வந்து குவிக்கப்பட்டு உள்ளன.
ஈரோடு:

ஆயுதபூஜை விழா வருகிற 25-ந் தேதி முதல் கொண்டாடப்படுகிறது. இதை முன்னிட்டு கோவில்களில் கொலுக்கள் அமைத்தும், துர்காதேவியின் அவதாரங்களை வைத்தும் பூஜைகள் நடத்தப்பட்டு வருகிறது. 

ஆயுத பூஜையின்போது திருஷ்டியை நீக்கும் வகையில் அனைவரும் வெள்ளை பூசணி எனப்படும் திருஷ்டி பூசணிக்காய்களை பூஜைக்கு வைத்து உடைப்பது வழக்கம். எனவே ஈரோட்டில் பல்வேறு பகுதிகளிலும் வெள்ளை பூசணிகள் கொண்டு வந்து குவிக்கப்பட்டு உள்ளன. வியாபாரி ஒருவர் கூறும்போது, வெள்ளை பூசணி ஒரு கிலோ ரூ.20 என்ற விலையில் விற்கப்பட உள்ளதாக தெரிவித்தார்.
Tags:    

Similar News