செய்திகள்
விராட் கோலி

விராட் கோலியின் அதிவேக அரைசதம்

Published On 2019-12-12 05:01 GMT   |   Update On 2019-12-12 05:01 GMT
வெஸ்ட் இண்டீஸ் அணிக்கெதிரான நேற்றைய ஆட்டத்தில் இந்திய கேப்டன் விராட் கோலி குறைந்த பந்தில் அரைசதத்தை கடந்துள்ளார்.
இந்திய அணி குவித்த 240 ரன்களே, மும்பை வான்கடே ஸ்டேடியத்தில் சர்வதேச 20 ஓவர் கிரிக்கெட்டில் ஒரு அணியின் அதிகபட்ச ஸ்கோராகும். இதற்கு முன்பு இங்கு 2016-ம் ஆண்டு 20 ஓவர் உலக கோப்பை போட்டியின் போது, இங்கிலாந்து அணி தென்ஆப்பிரிக்காவுக்கு எதிராக 230 ரன்கள் எடுத்ததே அதிகபட்சமாக இருந்தது.

இந்திய கேப்டன் விராட் கோலி 21 பந்துகளில் அரைசதத்தை ருசித்தார். இது அவரது அதிவேக அரைசதமாகும். மொத்தத்தில் இந்தியாவின் 5-வது அதிவேக அரைசதமாக இது பதிவானது.

இந்த ஆட்டத்தில் ரோகித் சர்மா 71 ரன்களும், லோகேஷ் ராகுல் 91 ரன்களும், விராட் கோலி 70 ரன்களும் விளாசினர். 20 ஓவர் கிரிக்கெட்டில் ஒரு இன்னிங்சில் 3 பேட்ஸ்மேன்கள் 70 ரன்களுக்கு மேல் எடுப்பது இதுவே முதல்நிகழ்வாகும்.
Tags:    

Similar News