செய்திகள்
கொரோனா தடுப்பு விதிகள் மீறல்

கொரோனா தடுப்பு விதிகள் மீறல்: பெங்களூருவில் இதுவரை ரூ.9.46 கோடி அபராதம் வசூல்

Published On 2021-04-09 02:40 GMT   |   Update On 2021-04-09 02:40 GMT
கொரோனா தடுப்பு விதிகள் சரியான முறையில் பின்பற்றப்படுகிறதா என்பதை கண்காணிக்கவும், விதிகளை பின்பற்றாதவர்களுக்கு அபராதம் விதிக்கவும் மார்ஷல்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
பெங்களூரு :

கர்நாடகத்தில் கொரோனா பரவல் 2-வது அலை வீசத்தொடங்கியுள்ளது. குறிப்பாக பெங்களூருவில் தினசரி 5 ஆயிரம் பேருக்கு வைரஸ் தொற்று ஏற்பட்டு வருகிறது. இதனால் முகக்கவசம் அணிவது, சமூக விலகலை பின்பற்றுவது போன்ற கட்டுப்பாடுகள் கட்டாயமாக்கப்பட்டு உள்ளன. இந்த கொரோனா தடுப்பு விதிகள் சரியான முறையில் பின்பற்றப்படுகிறதா என்பதை கண்காணிக்கவும், விதிகளை பின்பற்றாதவர்களுக்கு அபராதம் விதிக்கவும் மார்ஷல்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

அபராதம் வசூலிக்கும் அதிகாரம் போலீசாருக்கும் வழங்கப்பட்டுள்ளது. முகக்கவசம் அணியாதவர்களுக்கு ரூ.200 அபராதம் விதிக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. பெங்களூருவில் இதுவரை 3 லட்சத்து 75 ஆயிரத்து 917 பேர் முகக்கவசம் அணியாததால் அவர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. மேலும் சமூக இடைவெளியை பின்பற்றாத 25 ஆயிரத்து 73 பேரிடம் அபராதம் வசூலிக்கப்பட்டு இருக்கிறது. கொரோனா தடுப்பு விதிகளை மீறியதாக இதுவரை அபராதமாக ரூ.9.46 கோடி வசூலிக்கப்பட்டுள்ளதாக மாநகராட்சி நிர்வாகம் தெரிவித்துள்ளது.
Tags:    

Similar News