ஆன்மிகம்
வடபழனி முருகன் கோவில்

வடபழனி முருகன் கோவிலில் பாலாலயம்: 28 சாமிகளுக்கும், 3 பலி பீடத்துக்கும் நடந்தது

Published On 2021-10-28 07:40 GMT   |   Update On 2021-10-28 07:40 GMT
வடபழனி முருகன் கோவிலில் ஆகமவிதிகளை பின்பற்றி கோவில் வளாகத்தில் உள்ள 28 சாமிகள் (மூர்த்திகள்), 3 பலி பீடத்துக்கு கும்பாபிஷேகத்துக்கு முன்பு நடத்தப்படும் பாலாலயம் சிறப்பு பூஜை மற்றும் ஹோமம் நடந்தது.
சென்னை :

சென்னை வடபழனி முருகன் கோவிலில் 34 திருப்பணி வேலைகள் ரூ.2.56 கோடி செலவில் நடைபெற்று வருகிறது. இப்பணிகளை விரைந்து முடித்து கும்பாபிஷேகம் நடத்தப்படும் என இந்துசமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு அறிவித்துள்ளார். அதன்படி வடபழனி முருகன் கோவிலில் நேற்று கோவிலின் ஆகமவிதிகள் மற்றும் சட்டவிதிகளை பின்பற்றி கோவில் வளாகத்தில் உள்ள துவார பாலகர், துவார கணபதி, முத்துகுமார சாமி, இடும்பன், கடம்பன், சூரியன், சந்திரன், தட்சிணாமூர்தி, துர்கை, காசிவிஸ்வநாதர், காசிவிசாலாட்சி உட்பட 28 சாமிகள் (மூர்த்திகள்), 3 பலி பீடத்துக்கு கும்பாபிஷேகத்துக்கு முன்பு நடத்தப்படும் பாலாலயம் சிறப்பு பூஜை மற்றும் ஹோமம் நடந்தது.

நிகழ்ச்சியில் வடபழனி முருகன் கோவில் தக்கார் எல்.ஆதிமூலம், இணை-கமிஷனர்கள் லட்சுமணன், ஹரிபிரியா, உதவி கமிஷனர் பாலசுப்பிரமணியன், நகை மதிப்பீட்டாளர் ராதாகிருஷ்ணன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
Tags:    

Similar News