ஆன்மிகம்
இறை வழிபாட்டிற்கு முன் பிரகார வலம்

இறை வழிபாட்டிற்கு முன் பிரகார வலம்

Published On 2019-12-28 06:53 GMT   |   Update On 2019-12-28 06:53 GMT
ஆலயத்திற்குச் செல்பவர்கள் அனைவரிடமும், கருவறையில் இருக்கும் தெய்வத்தை வணங்கிய பிறகு, பிரகாரத்தைச் சுற்றுவதுதான் நடைமுறையில் பழக்கமாக இருந்து வருகிறது.
ஆலயத்திற்குச் செல்பவர்கள் அனைவரிடமும், கருவறையில் இருக்கும் தெய்வத்தை வணங்கிய பிறகு, பிரகாரத்தைச் சுற்றுவதுதான் நடைமுறையில் பழக்கமாக இருந்து வருகிறது. ஆனால் பிரகாரத்தைச் சுற்றிய பிறகுதான் கருவறைக்குச் செல்ல வேண்டும் என்பதே உண்மையான நியதி.

ஏனெனில் ஆலயத்தின் பிரகாரங்களைச் சுற்றிவரும்போதும், மற்ற எண்ணங்களை எல்லாம் விட்டு, ‘கருவறைக்குள் சென்று தெய்வத்தை வணங்க வேண்டுமே’ என்ற எண்ணம் மட்டும்தான் மனதுக்குள் நிறைந்திருக்கும். பிரகாரத்தை வலம் வந்தபின் இறைவனை வழிபடுவதற்கு ஒரு தத்துவார்த்தமான காரணமும் சொல்லப்படுகிறது. அதாவது, ‘இந்த உலகில் நாம் எங்கே சுற்றினாலும் சரி.. இறுதியில் நாம் அனைவரும் அடையப்போவது இறைவனின் சன்னிதியைத்தான்’ என்பதே அந்த தத்துவம்.
Tags:    

Similar News