உள்ளூர் செய்திகள்
மூதாட்டியிடம் நகை பறிப்பு

மதுரையில் மூதாட்டியிடம் நகை பறிப்பு

Published On 2022-01-06 09:30 GMT   |   Update On 2022-01-06 09:30 GMT
மதுரையில் மூதாட்டியிடம் மோட்டார் சைக்கிளில் வந்த 2 மர்ம நபர்கள் நகையை பறித்துச் சென்றனர்.
மதுரை

மதுரை டோக் நகர் எஸ்.பி.ஓ. காலனியை சேர்ந்தவர் ஜெகதாம்பாள் வயது 85. இவர் நேற்று இரவு பலசரக்கு கடைக்கு சென்று விட்டு வீடு திரும்பி கொண்டிருந்தார். 

அப்போது வீட்டு வாசலில் 2 பேர் மோட்டார் சைக்கிளில் நின்றனர்.  அவர்களிடம் நீங்கள் யார்? என்று ஜெகதாம்பாள் கேட்டார். அப்போது  அந்த 2 பேரும் ஜெகதாம்பாள்  அணிந்திருந்த   3 பவுன் தங்க சங்கிலியை பறித்து கொண்டு மின்னல் வேகத்தில் தப்பிச் சென்றனர். 

இதுதொடர்பாக ஜெகதாம்பாள் மகன் சங்கர் எஸ்.எஸ்.காலனி குற்றப்புலனாய்வு பிரிவு போலீசில் புகார் கொடுத்தார். இதன் அடிப்படையில் போலீசார் வழக்குபதிவு செய்து சம்பவ இடத்தில் விசாரணை நடத்தினர்.

அந்த பகுதியில் பொருத்தப்பட்டு உள்ள சி.சி. டி.வி கண்காணிப்பு காமிராக்களை கைப்பற்றி அவற்றில் இடம்பெற்றுள்ள காட்சி பதிவுகளை ஆய்வு செய்து வருகின்றனர்.

மதுரை எஸ்.எஸ்.காலனி போலீஸ் சரகம் பரப்பளவில் மிகவும் பெரியது. ஆனால் குற்றப்புலனாய்வு பிரிவில் இன்ஸ்பெக்டர், சப்-இன்ஸ்பெக்டர் உள்பட 2 பேர் மட்டுமே உள்ளனர். இதனால் அங்கு போலீசார் பாதுகாப்பு பணிகளில் ஈடுபடுவது சிரமமாக உள்ளது. 

எனவே மாநகர கமிஷனர் பிரேம் ஆனந்த் சின்கா எஸ்.எஸ்.காலனி போலீஸ் சரக குற்றப்புலனாய்வு பிரிவிற்கு கூடுதல் சப்-இன்ஸ்பெக்டர்களை நியமிக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Tags:    

Similar News