லைஃப்ஸ்டைல்

அச்சுறுத்தும் சர்க்கரை நோய்

Published On 2019-06-26 07:34 GMT   |   Update On 2019-06-26 07:34 GMT
சர்க்கரைநோய் என்பது கணையத்தின் பீட்டா செல்களால் இன்சுலினை சுரக்க முடியாமல் போகும் போது ரத்தத்தில் சேரும் குளுக்கோஸின் அளவு கூடுதலாக இருப்பது ஆகும்.
சர்க்கரைநோய் என்பது கணையத்தின் பீட்டா செல்களால் இன்சுலினை சுரக்க முடியாமல் போகும் போது ரத்தத்தில் சேரும் குளுக்கோஸின் அளவு கூடுதலாக இருப்பது ஆகும்.

சர்க்கரை நோய்

உடலுக்கு பலவிதமான நோய்களை கொண்டு வந்து சேர்க்ககூடிய நுழைவு வாயி லாக சர்க்கரை நோய் உள்ளது. சர்க்கரை நோய் 3 வகையாக உள்ளது.
1.முதல்வகை சர்க்கரைநோய்,
2. 2-ம் வகை சர்க்கரைநோய்,
3.கர்ப்பிணிகளுக்கு உண்டாகும் சர்க்கரைநோய்

முதல்வகை சர்க்கரைநோய்

முதல் வகை சர்க்கரை நோய் சிறுவயதிலேயே ஏற்படக்கூடிய ஒன்று. இந்த வகை நோயில் கணையத்தால் இன்சுலினை சுரக்க முடிவதில்லை. இவ்வகை சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்ட குழந்தைகள் பெரும்பாலும் குறைவான எடையுள்ளவர்களாக இருப்பார்கள். உடலுக்கு தேவையான இன்சுலினை வெளியே இருந்து உடலுக்குள் செலுத்த வேண்டிய நிர்பந்தம் ஏற்படுகிறது. எனவே இவர்களுக்கு மாத்திரைகளும் இன்சுலின் ஊசி மருந்தும் கொடுக்க வேண்டும்.

2-ம் வகை சர்க்கரைநோய்

2-ம் வகை சர்க்கரை நோய் பெரியவர்களுக்கு ஏற்படக்கூடியது. பரம்பரையில் யாருக்காவது சர்க்கரைநோய் இருந்தால், தலைமுறை பண்புகளை கொண்டு செல்லும் ஜீன்கள் 2-ம் வகை சர்க்கரைநோயை உருவாக்ககூடியது. பெரியவர்களுக்கு ஏற்படும் இந்த வகையில் இன்சுலின் சுரப்பு இருந்தாலும் மிக மெதுவாகத்தான் தன் பணியை செய்யும். எனவே மாத்திரைகளுடன் இன்சுலின் மருந்து தேவைப்படும். இவர்களுக்கு உணவு பழக்கத்தில் கட்டுபாடு தேவை மற்றும் உடற்பயிற்சி செய்ய வேண்டும்.

கர்ப்ப காலத்தில் சர்க்கரை நோய்

2% முதல் 4% வரை பெண்களுக்கு கர்ப்பக்காலத்தின் போது சர்க்கரை நோய் ஏற்படுகிறது. குழந்தை பிறந்தவுடன் இது மறைந்து விடுகிறது. இருந்த போதிலும், பிற்பாடு வாழ்க்கையில் குழந்தைக்கும் தாய்க்கும் நீரிழிவு உண்டாகும் வாய்ப்பை அதிகரிக்கக்கூடும்.

சர்க்கரை நோய்க்கான காரணங்கள்

மன அழுத்தம், துரித உணவுகள் அதிகமாக சாப்பிடுதல், பரம்பரையாக வருதல், அதிக அளவு கொழுப்புச்சத்து உள்ளவர்கள், உடல் எடை அதிகம் உள்ளவர்கள், கட்டுபாடற்ற உணவுகளை உண்ணுதல். சர்க்கரை நோய்க்கான காரணங்களாக உள்ளது.

சர்க்கரை நோயை கண்டறியும் முறை

ரத்தபரிசோதனை


காலை உணவிற்கு முன்னும் உணவு உண்ட 2 மணி நேரத்திற்கு பின்னரும் ரத்த பரிசோதனை எடுக்க வேண்டும். ரத்தத்தில் இயல்பாக இருக்க வேண்டிய சர்க்கரையின் அளவு உணவிற்கு முன்-80 முதல் 120 மில்லிகிராம்-/டெசிலிட்டர், உணவிற்கு பின்-100 முதல் 140 மில்லிகிராம்-/டெசிலிட்டர்

எச்பிஏ/சி பரிசோதனை

சிறுநீர்பரிசோதனை


சிறுநீரில் சர்க்கரையின் அளவு உள்ளதா என கண்டறிய வேண்டும்.

நீரிழிவு நோயால் ஏற்படக்கூடிய பின் விளைவுகள்

இந்த நோயால் பார்வை இழப்பு, இதயகோளாறு மற்றும் மாரடைப்பு, சிறுநீரக கோளாறுகள், பக்கவாதம் மயக்கமுற்ற நிலை ஏற்படும்.

சர்க்கரை நோய் வராமல் தடுக்க வேண்டியவை

இந்நோய் வராமல் தடுக்க பசி நன்கு வந்த பிறகு தான் சாப்பிட வேண்டும். சாப்பிட்ட பின் சிறிது குறுநடை கொள்ள வேண்டும். நொறுக்கு தீனி உணவுகளை தவிர்த்து கொள்ள வேண்டும். உடற்பயிற்சி செய்ய வேண்டும்.

Tags:    

Similar News