செய்திகள்
உத்தவ் தாக்கரே, தேவேந்திர பட்னாவிஸ்

கொரோனாவை சமாளிக்க வலுவான தலைமையை காட்டுங்கள்: உத்தவ் தாக்கரேக்கு பட்னாவிஸ் வலியுறுத்தல்

Published On 2020-05-28 03:52 GMT   |   Update On 2020-05-28 03:52 GMT
மகாராஷ்டிராவில் கொரோனாவை சமாளிக்க வலுவான தலைமையை காட்டுங்கள் என முதல்-மந்திரி உத்தவ் தாக்கரேக்கு எதிர்க்கட்சி தலைவர் தேவேந்திர பட்னாவிஸ் வலியுறுத்தி உள்ளார்.
மும்பை :

மகாராஷ்டிரா சட்டசபை எதிர்க்கட்சி தலைவர் தேவேந்திர பட்னாவிஸ் அளித்த பேட்டியில் கூறியதாவது:-

மகாராஷ்டிராவில் கொரோனா தொற்று பரவலை கட்டுப்படுத்த முதல்-மந்திரி உத்தவ் தாக்கரே வலிமையான தலைமைத்துவத்தை காட்ட வேண்டும்.

கொரோனாவுக்கு எதிராக எந்தவொரு சொந்த நலனும் இல்லாமல் போராட வேண்டும். தற்போது மாநில அரசாங்கத்தில் எந்த ஒருங்கிணைப்பும் இல்லை. சிவசேனா மற்றும் தேசியவாத காங்கிரஸ் நடத்திய கூட்டங்களுக்கு காங்கிரஸ் மந்திரிகள் அழைக்கப்படவில்லை.

ராஜ்பவன் அரசியல் மையமாக மாறிவிட்டதாக கூறுகிறீர்கள். முதல்-மந்திரியை அணுக முடியாத போது, பிரச்சினைகள் தீர்க்கப்படாத போது நாங்கள் எங்கு செல்வோம்?

கொரோனாவை கட்டுப்படுத்த நாங்கள் ஆக்கப்பூர்வமான பரிந்துரைகளை வழங்கும் போது, ஆளும் கட்சி அரசியலில் ஈடுபடுகிறது. எங்களை குறை கூறுகிறார்கள்.

மருத்துவமனைகளில் படுக்கைகளின் எண்ணிக்கை போதுமானதாக இல்லை. போதிய ஆம்புலன்ஸ் வசதியும் இல்லை. தனியார் மருத்துவமனைகள் மக்களிடம் இருந்து அதிக கட்டணம் வசூலிக்கின்றன.

மத்திய அரசின் ரூ.20 லட்சம் கோடி சிறப்பு தொகுப்பில் இருந்து மகாராஷ்டிரா ரூ.78 ஆயிரம் கோடியை பெற முடியும். கொரோனாவுக்கு எதிரான போராட்டத்திற்காக மத்திய அரசு ஏற்கனவே மகாராஷ்டிராவிற்கு ரூ.28 ஆயிரத்து 104 கோடி வழங்கி உள்ளது.

கொரோனவால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவ அரசாங்கம் தைரியமான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார். 
Tags:    

Similar News