செய்திகள்
பூங்காவில் குவிந்துள்ள சுற்றுலா பயணிகள்.

தொடர் விடுமுறை எதிரொலி- சுற்றுலா பயணிகள் வருகையால் திணறிய கொடைக்கானல்

Published On 2021-04-05 11:35 GMT   |   Update On 2021-04-05 11:35 GMT
கொடைக்கானலில் வெப்பநிலை சற்று குறைவாக இருப்பதாலும் அவ்வப்போது மழை பெய்து வருவதும், சுற்றுலா பயணிகளை மகிழ்வித்து வருகிறது. இதனால் குடும்பத்துடனும் நண்பர்களுடனும் கொடைக்கானல் வரும் சுற்றுலா பயணிகள் கூட்டம் அதிகரித்துள்ளது.

கொடைக்கானல்:

கொடைக்கானலில் தொடர் விடுமுறையால் சுற்றுலா பயணிகள் அதிகரிப்பின் காரணமாக முக்கிய சாலைகள் திணறியது.

வாரவிடுமுறையை தொடர்ந்து தேர்தல் விடுமுறை மற்றும் அதிகரித்து வரும் கோடை வெயில் காரணமாக கொடைக்கானலில் கடந்த சில நாட்களாக சுற்றுலா பயணிகள் வருகை தொடர்ந்து அதிகரித்த வண்ணம் உள்ளது.

கொடைக்கானலில் வெப்பநிலை சற்று குறைவாக இருப்பதாலும் அவ்வப்போது மழை பெய்து வருவதும், சுற்றுலா பயணிகளை மகிழ்வித்து வருகிறது. இதனால் குடும்பத்துடனும் நண்பர்களுடனும் கொடைக்கானல் வரும் சுற்றுலா பயணிகள் கூட்டம் அதிகரித்துள்ளது.

கோக்கர்ஸ் வாக், மோயர் சதுக்கம், பைன் மர சோலை, பில்லர் ராக், குணா குகை, பிரையண்ட் பூங்கா உள்ளிட்ட சுற்றுலா தலங்களில் சுற்றுலா பயணிகள் இயற்கை அழகினை கண்டு ரசித்தனர்.

தரை பகுதிகளில் கடுமையான வெப்பம் நிலவி வரும் நிலையில் கொடைக்கானல் மலை பகுதிகளில் பகலில் மிதமான வெப்பமும், மாலை வேளையில் குளிர்ந்த காற்று வீசி வருகிறது. இந்த இதமான சூழ்நிலையை அனுபவித்தவாறு சுற்றுலா பயணிகள் படகு மற்றும் குதிரை, சைக்கிள் சவாரி செய்து மகிழ்ந்து செல்கின்றனர். மேலும் அதிகமான சுற்றுலா பயணிகளின் வருகையால் சுற்றுலா தலங்களில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

இன்று மாலைக்கு பிறகு அவர்கள் சொந்த ஊருக்கு திரும்புவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இருந்தபோதும் வெளி மாநில சுற்றுலா பயணிகள் தொடர்ந்து வருகை தருவதால் ஓட்டல்கள், விடுதிகள் போன்றவற்றில் சுற்றுலா பயணிகளின் கூட்டம் அலைமோதி வருகிறது. இதனால் சுற்றுலா தொழிலை நம்பியுள்ள பல்வேறு தரப்பினரும் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

Tags:    

Similar News