செய்திகள்
சுப்ரீம் கோர்ட்

நிர்பயா வழக்கு குற்றவாளி வினய்குமார் மறுசீராய்வு மனுதாக்கல்

Published On 2020-01-09 07:58 GMT   |   Update On 2020-01-09 07:58 GMT
நிர்பயா வழக்கு குற்றவாளிகளில் ஒருவரான வினய்குமார் சர்மா தூக்கு தண்டனைக்கு எதிராக சுப்ரீம் கோர்ட்டில் இன்று மறுசீராய்வு மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளார்.
புதுடெல்லி:

டெல்லியில் கடந்த 2012-ம் ஆண்டு டிசம்பர் மாதம் ஓடும் பஸ்சில் மருத்துவ மாணவி (நிர்பயா) பாலியல் பலாத்காரம் செய்து கொல்லப்பட்டார்.

நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய இந்த வழக்கில் 6 பேர் கைது செய்யப்பட்டனர். குற்றவாளிகளில் ஒருவன் சிறுவன் என்பதால் அவன் 3 ஆண்டுகள் சீர்திருத்த பள்ளியில் அடைக்கப்பட்டான். பின்னர் விடுதலையானான். ராம்சிங் என்ற குற்றவாளி சிறையில் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டான்.

அக்சய்குமார்சிங், வினய் குமார் சர்மா, பவன்குப்தா, முகேஷ்சிங் ஆகிய 4 குற்றவாளிகளுக்கும் கடந்த 2017-ம் ஆண்டு தூக்கு தண்டனை விதிக்கப்பட்டது. சுப்ரீம் கோர்ட்டும் இதை உறுதி செய்தது. அவர்களது கருணை மனுவும் தள்ளுபடி செய்யப்பட்டது. சீராய்வு மனுக்களும் தள்ளுபடி ஆனது.



குற்றவாளிகள் 4 பேரையும் வருகிற 22-ந்தேதி காலை 7 மணிக்கு தூக்கில் போட டெல்லி ஐகோர்ட்டு நேற்று முன்தினம் உத்தரவிட்டது. இதையொட்டி திகார் சிறையில் அவர்களை தூக்கிலிடுவதற்கான பணிகள் நடந்து வருகின்றன.

இந்த நிலையில் குற்றவாளிகளில் ஒருவரான வினய்குமார் சர்மா தூக்கு தண்டனைக்கு எதிராக சுப்ரீம் கோர்ட்டில் இன்று மறுசீராய்வு மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளார்.

அவரது சார்பில் வக்கீல் ஏ.பி.சிங் இந்த மனுவை தாக்கல் செய்துள்ளார். அந்த மனுவில் “சம்பவம் நடந்தபோது வினய்குமாருக்கு 19 வயது மட்டுமே. இதனால் அவரது தூக்கு தண்டனையை மறு பரிசீலனை செய்ய வேண்டும்” என்று கூறப்பட்டு இருந்தது.

Tags:    

Similar News