செய்திகள்

அமைதிப் பேரணி நிறைவு - கருணாநிதி நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தினார் அழகிரி

Published On 2018-09-05 07:30 GMT   |   Update On 2018-09-05 07:30 GMT
சென்னையில் நடந்த அமைதிப் பேரணியின் முடிவில், கருணாநிதி நினைவிடத்தில் மு.க.அழகிரி மற்றும் அவரது ஆதரவாளர்கள் அஞ்சலி செலுத்தினர். #MKAlagiri #AlagiriPeaceRally #DMK
சென்னை:

தி.மு.க.வில் இருந்து நீக்கப்பட்ட மு.க. அழகிரி, கருணாநிதியின் மறைவுக்குப் பிறகு மீண்டும் கட்சியில் சேரும் முயற்சியில் ஈடுபட்டார். கட்சி மேலிடம் அவரைக் கண்டுகொள்ளாத நிலையில், தனது பலத்தை நிரூபிக்கும் வகையில் இன்று சென்னையில் கருணாநிதி நினைவிடம் நோக்கி அமைதிப் பேரணி நடத்தினார்.



திருவல்லிக்கேணி போலீஸ் நிலையம் அருகே வாலாஜா சாலையில் இருந்து காலை 11.25 மணியளவில் மு.க.அழகிரி தலைமையில் அமைதி பேரணி தொடங்கியது. தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் இருந்து வந்திருந்த ஏராளமானோர் பேரணியில் கலந்துகொண்டர். இவர்களில் பெரும்பாலானோர் கருப்புச் சட்டை அணிந்திருந்தனர்.

அமைதியாக நடைபெற்ற இந்த பேரணி 12.40 மணியளவில் கடற்கரை சாலையில் நிறைவடைந்தது. இதையடுத்து கருணாநிதி நினைவிடத்தில் மு.க.அழகிரி மலர்தூவி மரியாதை செலுத்தினார். மு.க.அழகிரியின் அமைதி பேரணி நடைபெற்ற சாலை முழுவதும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. #MKAlagiri #AlagiriPeaceRally #DMK
Tags:    

Similar News