செய்திகள்
கோப்பு படம்.

அரியானாவில் பிப்ரவரி முதல் வாரத்தில் பள்ளிகள் திறக்க வாய்ப்பு

Published On 2021-01-21 13:05 GMT   |   Update On 2021-01-21 13:05 GMT
அரியானாவில் பிப்ரவரி முதல் வாரத்தில் பள்ளிகள் திறக்க முடிவெடுக்கப்பட்டுள்ளதாக அம்மாநில கல்வித்துறை தெரிவித்துள்ளது.
கவுகாத்தி:

கொரோனா தொற்று காரணமாக கடந்த 2020ஆம் ஆண்டு மார்ச் மாதம் முதல் கல்வி நிலையங்கள் மூடப்பட்டன. மாநிலங்களின் தொற்று பாதிப்பு நிலைகளுக்கேற்ப பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் தற்போது படிப்படியாக திறக்கப்பட்டு வருகின்றன.

இந்நிலையில் அரியானா மாநிலத்தில் 6 முதல் 8ஆம் வகுப்புகளுக்கு பிப்ரவரி முதல் வாரத்தில் இருந்து பள்ளிகள் திறக்கப்படும் என அரியானா மாநில பள்ளிக்கல்வித் துறை தெரிவித்துள்ளது.

கொரோனா தொற்று பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளுடன் பள்ளிகள் திறக்கப்படும் என மாநில அரசு தெரிவித்துள்ளது.

முன்னதாக அரியானாவில் கடந்த செப்டம்பர் மாதம் 9 முதல் 12ஆம் வகுப்பு வரை பள்ளிகள் திறக்கப்பட்ட நிலையில் தொற்று பரவலின் காரணமாக மீண்டும் மூடப்பட்டது. அதனைத் தொடர்ந்து டிசம்பர் மத்தியில் மீண்டும் திறக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
Tags:    

Similar News