லைஃப்ஸ்டைல்
சிறுதொழில்

பெண்களே சிறுதொழில் தொடங்க போறீங்களா? அப்ப இத படிங்க...

Published On 2021-07-27 06:20 GMT   |   Update On 2021-07-27 06:20 GMT
தொழிலை தொடங்குவதற்கு முன்னர் அதற்கான மொத்த முதலீடு எவ்வளவு என்பதை கணக்கிட்டு அதை போல இரண்டு மடங்கு முதலீட்டை கையில் வைத்திருக்க வேண்டும்.
வேலைவாய்ப்பை தேடுவதை விட பிறருக்கு வேலைவாய்ப்பை அளிக்கும் சிறு தொழில் தொடங்கி தொழில் முனைவோராக வேண்டும் என்பது பலருடைய கனவு. சிறு தொழில் தொடங்க திட்டமிடுபவர்களுக்கான சில ஆலோசனைகள் இதோ...

* முதலில் என்ன தொழிலை செய்யப்போகிறீர்கள் என்பதில் தெளிவாக இருக்க வேண்டியது அவசியமாகும்.

* ஒரு பொருளை உற்பத்தி செய்ய திட்டமிடும் நிலையில் அதற்கான விற்பனை வாய்ப்பு எப்படி உள்ளது? என்பதை அறிந்திருக்க வேண்டும். விற்பனை செய்யும் பொருட்களை சம்பந்தப்பட்ட சூழலுக்கு பொருத்தமானதா? என்பதை முன்னதாகவே பரிசோதித்து கொள்ள வேண்டும்.

* தொழிலை தொடங்குவதற்கு முன்னர் அதற்கான மொத்த முதலீடு எவ்வளவு என்பதை கணக்கிட்டு அதை போல இரண்டு மடங்கு முதலீட்டை கையில் வைத்திருக்க வேண்டும்.

* எதிர்பாராமல் நஷ்டம் ஏற்படும் சூழலில் தொழிலை மீண்டும் சரியாக நடத்திச்செல்லும் தெளிவும் துணிச்சலும் அவசியம் தேவை.

* உற்பத்தி செய்யும் பொருளுக்கும் நிறுவனத்துக்கும் ஏற்ற பெயர்களை தேர்வு செய்து முறைப்படி பதிவு செய்து கொள்ள வேண்டும்.

* வீட்டை சுற்றிலும் உணவகங்கள் அதிகமாக இருந்தால் சாப்பாட்டு இலை மற்றும் தண்ணீர் சப்ளை செய்வதற்கான வாய்ப்பை பெறலாம். உணவகங்களில் மசாலா அரைத்து தருவதை காண்ராக்ட் முறையில் பெற்று செய்யலாம். அத்துடன் பாக்கெட் பால், தயிர், மோர், பாக்கெட் மாவு போன்றவற்றை விற்பனை செய்து கூடுதல் லாபம் பெறலாம்.

* திருமண அழைப்பிதழ் அச்சடிப்பது முதல் தாம்பூலப்பை வரை அனைத்து பொறுப்பையும் சிறப்பாக செய்து முடிக்கும் பணியை திறமையான கூட்டணி மூலம் சாதிக்கலாம்.

* வீடுகள் அல்லது கடைகளில் பட்ஜெட்டுக்கேற்ப எந்திரங்களை அமைத்து தொழில் தொடங்கலாம். உதாரணமாக பாப்கார்ன் தயாரிக்கும் மெஷினை மக்கள் நடமாட்டம் அதிகம் உள்ள இடங்களில் வைத்து தொழில் செய்யலாம்.

* அதிக முதலீடு இல்லாமல் ஸ்கிரீன் பிரிண்ட்டிங், ஃபேப்ரிக் பிரிண்ட்டிங் தொழில் மூலம் திருமண அழைப்பிதழ்கள், விசிட்டிங் கார்டுகள், பைகள் போன்றவற்றை அச்சிட்டும் தொழில் செய்யலாம்.

* குறிப்பிட்ட நபர்கள் தொழிலில் லாபம் ஈட்டுகிறார்கள் என்பதற்காக அதை தேர்வு செய்யாமல் அனுபவமும் ஆர்வமும் உள்ள தொழிலில் மட்டுமே ஈடுபடுங்கள்.

* பொருட்கள் தரமாக இருப்பது போல் அதை கச்சிதமாக பேக்கிங் செய்து கொடுப்பதும் அவசியம்.

* வாடிக்கையாளர்களிடம் அன்பாகவும், முகம் சுளிக்காமலும் நடந்து கொள்வதன் மூலமே வியாபாரம் அதிகரிக்கும் என்பதை மனதில் வைத்துக்கொள்ள வேண்டும்.

* அரசு அளிக்கும் தொழில் முனைவோருக்கான இலவச பயிற்சி வகுப்புகளில் கலந்து கொண்டு விரும்பும் தொழிலை கற்று அதில் வருமானம் ஈட்டலாம்.
Tags:    

Similar News