செய்திகள்
சோயிப் அக்தர், வாசிம் அக்ரம்

அவர் சொல்வதை எல்லாம் பெரிதாக எடுத்துக் கொள்ளாதீர்கள்: வாசிம் அக்ரம்

Published On 2021-09-11 11:30 GMT   |   Update On 2021-09-11 11:30 GMT
பாகிஸ்தான் அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் சோயிப் அக்தர் அடிக்கடி அந்நாட்டு கிரிக்கெட் போர்டு குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசி வருவதை வழக்கமாக கொண்டுள்ளார்.
பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் முன்னணி வேகப்பந்து வீச்சாளராக திகழ்ந்தவர் சோயிப் அக்தர். தனது அதிவேக பந்து வீச்சால் சர்வதேச நட்சத்திர பேட்ஸ்மேன்களை எல்லாம் நடுநடுங்க வைத்தவர்.

பாகிஸ்தான் கிரிக்கெட் அணி சர்வதேச அளவில் மோசமான தோல்வியை சந்திக்கும்போது, அணி நிர்வாகம் மீது கடுமையான விமர்சனத்தை வைக்கக்கூடியவர். சமீபத்தில் கூட பாகிஸ்தான் கிரிக்கெட் போர்டில் சேர்மன் பதவியை விட வேறு எந்த பதவியையும் விரும்பவில்லை என நெத்தியடியாக பேட்டியளித்திருந்தார்.

இந்த நிலையில், பாகிஸ்தான் கிரிக்கெட் மற்றும் உலக கிரிக்கெட்டில் முத்திரை பதித்த முன்னாள் வீரர்கள் வாசிம் அக்ரம் கூறுகையில் ‘‘அக்தரை பாகிஸ்தான் கிரிக்கெட் போர்டின் தலைவராக்குங்கள். சோயிப் அக்தர் பேசுவதை மக்கள் ஏன் தீவிரமாக எடுத்துக் கொள்கிறார்கள் எனத் தெரியவில்லை. ஒருவருக்கு நாகரிகம் இல்லையென்றால், அவருக்கு வாழ்க்கை பற்றி தெரிந்திருக்காது.

பாகிஸ்தான் கிரிக்கெட் அணிக்கு பயிற்சியாளராக தேர்வு செய்ய உள்ளூர் பயிற்சியாளர்கள் சிலர் பெயரை கொடுங்கள். நான் சிறந்த ஒருவரை தேர்வு செய்ய முயற்சிப்பேன். ஆனால், அப்படி ஒருவர் இருக்கிறாரா? என்பது சந்தேகம்தான்.

ஜாவித் மியான்தத் சிறந்த கிரிக்கெட் அறிவு கொண்டவர். பாகிஸ்தான் கிரிக்கெட்டுடன் தொடர்பில் உள்ளவர். அவர் கிரிக்கெட் டைரக்டர் அல்லது ஆலோசகராகலாம். ஆனால் பயிற்சியாளர்கள் என்று வரும்போது, பாகிஸ்தான் கிரிக்கெட் உடன் 10 முதல் 15 வரும் தொடர்பின் இருந்திருக்க வேண்டும்.

பயிற்சியாளர்கள் அணியை தேர்வு செய்யும்போது ஈகோ இருக்கக் கூடாது. போட்டி நடைபெற்ற பின், இந்த வீரரை தேர்வு செய்தோம், நன்றாக விளையாடினோம் என இருக்க வேண்டும்’’ என்றார்.

Tags:    

Similar News