செய்திகள்
மம்தா பானர்ஜி

இஸ்ரோவை சாடினாரா மம்தா? பீதியை கிளப்பும் வைரல் பதிவுகள்

Published On 2019-09-16 07:07 GMT   |   Update On 2019-09-16 07:07 GMT
மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி இஸ்ரோவை சாடியதாக சமூக வலைத்தளங்களில் வைரலாகும் பதிவின் உண்மை பின்னணியை பார்ப்போம்.



மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி இந்திய விண்வெளி ஆய்வு மையமான இஸ்ரோவை கடுமையாக சாடியதாக தகவல் பரவுகிறது. நிலவை ஆய்வு செய்ய இந்தியா சார்பில் விண்ணில் செலுத்தப்பட்ட சந்திரயான் 2 எதிர்பார்த்த முடிவுகளை வழங்காததால், மம்தா பானர்தி இஸ்ரோவை சாடியதாக வைரல் பதிவுகளில் கூறப்பட்டுள்ளது.

இந்த ஆண்டு ஜூலை 22 ஆம் தேதி சந்திரயான் 2 விண்ணில் செலுத்தப்பட்டது. பலகட்ட வெற்றிகளைத் தொடர்ந்து விண்கலத்தில் இருந்து நிலவை நோக்கி பயணித்த விக்ரம் லேண்டர் செப்டம்பர் 7 ஆம் தேதி இஸ்ரோவுடனான தகவல் தொடர்பை இழந்தது. நிலவின் மேற்பரப்பை அடைய மிகக்குறைந்த தூரம் இருந்த நிலையில், விக்ரம் லேண்டர் தகவல் தொடர்பை இழந்தது, அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது.



வைரல் பதிவு பற்றி வைரலான செய்தியில், செய்ய முடியாததை செய்ய முயற்சிக்க கூடாது என மம்தா கூறியதாக தலைப்பிடப்பட்டுள்ளது. இந்த செய்தி மம்தா பானர்ஜி புகைப்படத்துடன் விக்ரம் லேண்டரின் புகைப்படமும் இணைக்கப்பட்டிருந்தது.

இதுகுறித்த வெளியான செய்தியில் இஸ்ரோவின் திட்டத்தை விமர்சித்த மம்தா பானர்ஜியின் தேச விரோத கருத்துக்களுக்கு கண்டனம் தெரிவிக்கும் வகையில் எழுதப்பட்டிருக்கிறது. இதே பதிவு சமூக வலைத்தளங்களில் வைரலாகியுள்ளது. செய்திகளின் உண்மைத்தன்மையை ஆய்வு செய்ததில், செய்தியை வெளியிட்டது போலி வலைத்தளம் என்பது உறுதியாகி இருக்கிறது.



செய்தியை வெளியிட்ட வலைத்தளத்தில் பல்வேறு செய்திகள் முரணாக இருந்தது. உண்மையில் மம்தா பானர்ஜி தனது அதிகாரப்பூர்வ டுவிட்டர் பக்கத்தில் இஸ்ரோவை பாராட்டும் விதமாக இரண்டு டுவிட்களை பதிவிட்டிருக்கிறார். அந்த வகையில் வைரல் செய்தி மற்றும் பதிவுகளில் துளியும் உண்மையில்லை என்பது உறுதியாகியுள்ளது.
Tags:    

Similar News