தொழில்நுட்பம்
ரெடிட்

டப்ஸ்மாஷ்-ஐ விலைக்கு வாங்கிய ரெடிட்

Published On 2020-12-14 07:48 GMT   |   Update On 2020-12-14 07:48 GMT
குறு வீடியோ செயலியான டப்ஸ்மாஷ்ஐ ரெடிட் விலைக்கு வாங்கி இருக்கிறது. இதன் விவரங்களை தொடர்ந்து பார்ப்போம்.


ஆன்லைன் தளமான ரெடிட் வீடியோ பகிரும் செயலியான டப்ஸ்மாஷை விலைக்கு வாங்கி இருக்கிறது. வீடியோ தளத்தை ரெடிட் எவ்வளவு தொகைக்கு வாங்கி இருக்கிறது என்ற விவரங்கள் இதுவரை வெளியாகவில்லை.  

ஒப்பந்தத்தின் பிறகும் டப்ஸ்மாஷ் தனது பிளாட்பார்ம் மற்றும் பிராண்டிங்கில் மாற்றம் செய்யாது. ரெடிட் நிறுவனம் டப்ஸ்மாஷ் குழுவை ஒருங்கிணைத்து தற்போதுள்ள டப்ஸ்மாஷ் அனுபவத்தை மாற்றும் பணிகளில் ஈடுபட இருப்பதாக கூறப்படுகிறது.



ரெடிட் நிறுவனத்துடனான ஒப்பந்தத்தின் படி டப்ஸ்மாஷ் இணை நிறுவனர்களுடன் ஒட்டுமொத்த குழுவும் ரெடிட் உடன் இணைகிறது. டப்ஸ்மாஷ் வித்தியாசமான வீடியோ டூல்கள் ரெடிட் தளத்தில் ஒருங்கிணைக்கப்படும் என தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.

இதன் மூலம் ரெடிட் பயனர்கள் தங்களின் கற்பனையை புதுவிதங்களில் வெளிப்படுத்த முடியும். டப்ஸ்மாஷ் தளத்தில் ஒவ்வொரு மாதமும் சுமார் 100 கோடி வியூக்களை பெற்று வருகிறது.

Tags:    

Similar News