செய்திகள்
இங்கிலாந்தில் உள்ளூர் அளவில் லாக்டவுன்

இந்திய வம்சாவளி மக்கள் அதிக அளவில் வசிக்கும் இடத்தில் உள்ளூர் லாக்டவுன்: இங்கிலாந்து திட்டம்

Published On 2020-06-28 12:32 GMT   |   Update On 2020-06-28 13:42 GMT
இங்கிலாந்தில் இந்திய வம்சாவளி மக்கள் உள்ளிட்டோரை அதிக அளவில் கொரோனா பாதிக்க வாய்ப்புள்ளதால் உள்ளூர் லாக்டவுன் அமல்படுத்தப்பட இருக்கிறது.
ஐரோப்பிய நாடுகளில் இத்தாலி, ஸ்பெயினுக்கு அடுத்தப்படியாக இங்கிலாந்தில் கொரோனா வைரஸ் மிகப்பெரிய அளவில் தாக்கியது. சுமார் 3,11,739 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், 43,598 பேர் உயிரிழந்தனர்.

தற்போது கொரோனாவில் தாக்கம் குறைந்துள்ளால் லாக்டவுன் தளர்த்தப்பட்டுள்ளது. லாக்டவுன் தளர்த்தப்பட்டதால் தொற்றின் தாக்கம் சற்று அதிகரித்துள்ளது.

இங்கிலாந்தில் கொரோனா வைரஸ் தொற்றின் தாக்கம் உச்சத்தில் இருக்கும்பேது இந்திய வம்சாவளியைச் சேர்ந்த 763 பேர் உயிரிழந்தனர். அதற்கு அடுத்தப்படியாக பாகிஸ்தான் வம்சாவளி மற்றும் மேற்கு இந்திய தீவுகள் நாட்டைச் சேர்ந்தவர்கள் அதிகமாக பாதிக்கப்பட்டனர்.

இந்நிலையில் கொரோனா வைரஸ் தொற்றின் எண்ணிக்கை மீண்டும் அதிகரிக்க தொடங்கியுள்ளதால் உள்ளூர் அளவில் லாக்டவுனை அமல்படுத்த இங்கிலாந்து அரசு திட்டமிட்டுள்ளது என்ற தகவல் வெளியானது. குறிப்பாக இந்திய வம்சாவளி மக்கள் வசிக்கும் இடத்தில் ஊரடங்கு அமல்படுத்தப்படு இருக்கிறது.

இதை உள்துறை செயலாளர் ப்ரீத்தி பட்டேல் உறுதிப்படுத்தியுள்ளார். ‘‘அந்த தகவல் சரியானதுதான். இந்திய வம்சாவளி மக்கள் அதிகமாக வாழ்ந்து வரும் லெய்செஸ்டர் போன்ற பகுதிகளில் முதலில் அமல்படுத்த உள்ளோம்’’என்று தெரிவித்துள்ளார்.

நாங்கள் ஏற்கனவே நாட்டின் எல்லா பகுதிகளிலும் இந்திய வம்சாவளி மக்கள் அதிக அளவில் பாதிக்கப்பட்டிருந்ததை பார்த்தோம். குறிப்பாக கடைசி நான்கு அல்லது ஐந்து வாரத்தில் இதை கண்டறிந்தோம். இதனால் உள்ளூர் லாக்டவுன், சமூக இடைவெளி, அதிக அளவிலான பரிசோதனை போன்றவற்றால் வைரஸ் தொற்றை கட்டுப்படுத்த இது சரியான வழிமுறையாக இருக்கும்’’ என்றார்.
Tags:    

Similar News