ஆன்மிகம்
முளைப்பாரி விழா

அரியநாச்சி அம்மன் கோவில் முளைப்பாரி விழா

Published On 2021-08-20 05:08 GMT   |   Update On 2021-08-20 05:08 GMT
முதுகுளத்தூர் அரியநாச்சி அம்மன் கோவில் முளைப்பாரி திருவிழா நடைபெற்றது. விழாவையொட்டி அரியநாச்சி அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், ஆராதனைகள் நடைபெற்றது.
முதுகுளத்தூர் அருகே சாம்பக்குளம் கிராமத்தில் உள்ள அரியநாச்சி அம்மன் கோவில் முளைப்பாரி திருவிழா நடைபெற்றது. இவ்விழா கடந்த ஒரு வாரத்துக்கு முன் காப்பு கட்டுதலுடன் தொடங்கியது. விழாவை தொடர்ந்து அம்மனுக்கும் கிராம தேவதைகளுக்கும் தினசரி சிறப்பு பூஜைகள், ஆராதனைகள் நடைபெற்றது.

இதையடுத்து நேற்று முன்தினம் இரவு மடத்திலிருந்து முளைப்பாரியை அரியநாச்சி அம்மன் கோவிலுக்கு பெண் பக்தர்கள் கொண்டு வந்தனர். முக்கிய விழாவான முளைப்பாரி ஊர்வல திருவிழா நேற்று மாலை நடைபெற்றது. விழாவையொட்டி அரியநாச்சி அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், ஆராதனைகள் நடைபெற்றது.

இதைதொடர்ந்து அரியநாச்சி அம்மன் கோவிலில் இருந்து முளைப்பாரியை பக்தர்கள் சுமந்து முக்கிய வீதி வழியாக வலம் வந்து பின்னர் அரியநாச்சி அம்மன் கோவில் அருகே உள்ள ஊருணியில் கரைத்தனர்.
Tags:    

Similar News