லைஃப்ஸ்டைல்
பெண்கள் கல்வியில் ஏற்படும் பேரிழப்பு

பெண்கள் கல்வியில் ஏற்படும் பேரிழப்பு

Published On 2021-07-28 06:34 GMT   |   Update On 2021-07-28 06:34 GMT
பெரும்பாலான பெண் குழந்தைகள் தொடக்க கல்வி படிப்பை எவ்வித சிரமமும் இன்றி படித்து முடித்துவிடுகிறார்கள். பருவம் அடைதல், குழந்தை திருமணம் போன்ற விஷயங்கள் பெண்கள் கல்வியை தொடர்வதில் பாதிப்பை ஏற்படுத்துகின்றன.
பெண்கள் ஒருபக்கம் உயர் கல்வி பயின்று அனைத்து துறைகளிலும் கால் பதித்து சாதித்துக்கொண்டிருந்தாலும், இன்னொரு பக்கம் பள்ளிப்படிப்பை பாதியிலேயே நிறுத்தும் நிலையும் தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறது. பெண்கள் மற்றும் குழந்தைகள் நல மேம்பாட்டு அமைச்சகம் நடத்திய ஆய்வில் இந்த உண்மை தெரியவந்திருக்கிறது.

கர்நாடகா, அசாம், பீகார், அருணாச்சலபிரதேசம், திரிபுரா உள்ளிட்ட மாநிலங்களில், பள்ளி செல்லும் பெண் குழந்தைகளின் இடைநிற்றல் விகிதம் அதிகரித்துள்ளது. 2014-ம் ஆண்டு முதல் 2019-ம் ஆண்டு வரையிலான காலகட்டத்தில் பெண் குழந்தைகளின்
கல்வி
நிலை இதில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. ஒவ்வொரு ஆண்டும் பள்ளியில் புதிதாக சேரும் பெண் குழந்தைகளின் எண்ணிக்கை அதிகரித்து வந்தாலும், உயர் நிலை கல்வியை முடிப்பதற்கு முன்பாகவே பள்ளிப்படிப்பை நிறுத்திவிடும் நிலை நீடிக்கிறது. சராசரியாக ஒவ்வொரு ஆண்டும் தொடக்க கல்வி, இடை நிலை கல்வியை தொடர முடியாமல் இடை நிறுத்தம் செய்துவிட்டு வீட்டுக்குள்ளேயே முடங்கி கிடக்கும் பெண்களின் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டே வருகிறது.

2014-2015-ம் ஆண்டில் இடை நிலை கல்வியை பொறுத்தவரை படிப்பை பாதியில் நிறுத்திய பெண்களின் எண்ணிக்கை 17.79 சதவீதமாக இருந்திருக்கிறது. அதுபோல் தொடக்க
கல்வி
யை கைவிட்டவர்களின் எண்ணிக்கை 4.3 சதவீதமாக இருக்கிறது. 2015-16-ம் ஆண்டுகளில் இடைநிலைக்கல்வியில் இடை நிற்றல் விகிதம் 16.88 சதவீதமாகவும், தொடக்க கல்வி இடைநிற்றல் சதவீதம் 4.09 ஆகவும் இருந்திருக்கிறது. 2016-17-ம் ஆண்டில் இந்த சதவீதம் உயர்ந்திருக்கிறது. அந்த கல்வி ஆண்டில் இடை நிலை கல்வி மட்டத்தில் இடை நிற்றல் சதவீதம் 19.81 சதவீதமாகவும், தொடக்க கல்வி இடை நிற்றல் 6.34 சதவீதமாகவும் பதிவாகி இருக்கிறது. 2017-18-ம் ஆண்டில் இடை நிலைக்கல்வி 18.39 சதவீதமாகவும், தொடக்க கல்வி 4.1 சதவீதமாகவும் இருந்திருக்கிறது. 2018-19-ம் ஆண்டில் இடை நிலை கல்வியை பாதியிலேயே முடித்துக்கொண்டவர்களின் சதவீதம் 17.3 ஆகவும், தொடக்க கல்வியை கைவிட்டவர்களின் சதவீதம் 4.74 ஆகவும் உள்ளது.

பெரும்பாலான பெண் குழந்தைகள் தொடக்க கல்வி படிப்பை எவ்வித சிரமமும் இன்றி படித்து முடித்துவிடுகிறார்கள். உயர் நிலை வகுப்புகளில் படிப்பை தொடர்வதில்தான் பிரச்சினையை எதிர்கொள்கிறார்கள். பருவம் அடைதல், குழந்தை திருமணம் போன்ற விஷயங்கள் பெண்கள் கல்வியை தொடர்வதில் பாதிப்பை ஏற்படுத்துகின்றன. குழந்தை திருமணத்தை ஒழிப்பதற்கான சட்டங்கள் கடுமையாக்கப்பட்டாலும் ஆங்காங்கே அத்தகைய திருமணங்கள் நடந்து கொண்டுதான் இருக்கின்றன. 2020-ம் ஆண்டில் மட்டும் தேசிய உரிமைகள் பாதுகாப்பு ஆணையம், குழந்தை திருமணம் தொடர்பாக 111 வழக்குகளை பதிவு செய்துள்ளது.
Tags:    

Similar News