செய்திகள்
பல்லடம் நகராட்சி அலுவலகத்தில், பொதுமக்களிடமிருந்து ஆணையாளர் விநாயகம் மனு பெற்ற போது எடுத்த படம்

பல்லடத்தில் அடுக்குமாடி குடியிருப்பு பெற 654 பேர் விண்ணப்பம்

Published On 2021-09-20 09:06 GMT   |   Update On 2021-09-20 09:06 GMT
முகாமில் கலந்துகொள்ள முடியாதவர்கள் நகராட்சி அலுவலக வேலை நாட்களில் வருகிற 24-ந்தேதி வரை விண்ணப்பம் அளிக்கலாம் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.
பல்லடம்:

பல்லடத்தில் அடுக்குமாடி குடியிருப்புகளில் வீடு பெறுவதற்கு சிறப்பு முகாம் நடைபெற்றது. இதுகுறித்து நகராட்சி ஆணையாளர் விநாயகம் கூறியதாவது:

பல்லடம் நகராட்சி பகுதியில் குடியிருக்கும் பொதுமக்களில் அவர்களது பெயரிலோ, அல்லது குடும்பத்தார் பெயரிலோ, சொந்த வீடு அல்லது நிலம் இல்லாத பயனாளி மற்றும் குடும்பத்தாரின் ஆண்டு வருமானம் ரூ.3 லட்சத்திற்கு குறைவாக உள்ளவர்களுக்கு தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்தால் கட்டப்பட்ட  அடுக்குமாடி குடியிருப்புகளில் வீடு ஒதுக்கீடு செய்யப்பட உள்ளது. 

இதற்கு அரசு நிர்ணயிக்கும் சுமார் ரூ.1.50 லட்சம் பயனாளியின் பங்களிப்பாக செலுத்த வேண்டும். அதற்கான சிறப்பு முகாம் பல்லடம் நகராட்சி அலுவலகத்தில், நடைபெற்றது. இந்த சிறப்பு முகாமில் 654 மனுக்கள் பெறப்பட்டது.  

கலந்துகொள்ள முடியாதவர்கள், நகராட்சி அலுவலக வேலை நாட்களில் வருகிற 24-ந்தேதி வரை விண்ணப்பம் தரலாம். இவ்வாறு அவர் தெரிவித்தார்.
Tags:    

Similar News