செய்திகள்

பிளஸ் 1 தேர்வு முடிவுகள் வெளியீடு- தஞ்சை மாவட்டத்தில் 95.85 சதவீதம் தேர்ச்சி

Published On 2019-05-08 09:59 GMT   |   Update On 2019-05-08 09:59 GMT
தஞ்சை மாவட்ட பிளஸ்-1 தேர்வு முடிவுகளை, மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் சாந்தா வெளியிட்டார். தேர்ச்சி சதவீதம் 95.85 ஆகும். இது கடந்தை ஆண்டைவிட 4.82 சதவீதம் கூடுதலாகும். #Plus1Results
தஞ்சாவூர்:

தமிழகத்தில் பிளஸ் 2 , எஸ்.எஸ்.எல்.சி பொதுத்தேர்வு போல் பிளஸ் 1 க்கும் பொதுத்தேர்வு அறிமுகப்படுத்தப்பட்டது. இந்த தேர்வானது கடந்த ஆண்டு முதல் முறையாக நடைபெற்றது. அதன்படி பிளஸ் 1 பொது தேர்வுகள் கடந்த மார்ச் 6ம் தேதி தொடங்கி 22ம் தேதி வரை நடைபெற்றது. தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள பட்டுக்கோட்டை‌, தஞ்சாவூர், கும்பகோணம், ஒரத்தநாடு ஆகிய 4 கல்வி மாவட்டங்களிலும் மொத்தம் 27 ஆயிரத்து 386 மாணவ,மாணவிகள் தேர்வு எழுதினர். இதில் மாணவர்கள் 12 ஆயிரத்து 98 பேரும், மாணவிகள் 15 ஆயிரத்து 288 பேரும் தேர்வு எழுதினர். விடைத்தாள் திருத்தும் பணி கடந்த மார்ச் இறுதியில் தொடங்கி மும்முரமாக நடைபெற்று வந்தது. இந்நிலையில் பள்ளிக்கல்வித்துறையினர் அறிவித்தபடி பிளஸ் 1 தேர்வு முடிவுகள் இன்று வெளியிடப்பட்டது.

தஞ்சை மாவட்ட பிளஸ்-1 தேர்வு முடிவுகளை, மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் சாந்தா வெளியிட்டார். அதன்படி தஞ்சை மாவட்டத்தில் மாணவர்கள் 11 ஆயிரத்து 378 பேரும், மாணவிகள் 14 ஆயிரத்து 872 பேர் என மொத்தம் 26 ஆயிரத்து 250 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். தேர்ச்சி சதவீதம் 95.85 ஆகும். இது கடந்தை ஆண்டைவிட 4.82 சதவீதம் கூடுதலாகும். அதேபோல் மாநில அளவில் தஞ்சை மாவட்டம் கடந்த ஆண்டு 21 வது இடத்தை பிடித்துருந்தது. ஆனால் இந்த ஆண்டு 4 இடங்கள் முன்னேறி 17வது இடத்தை பிடித்துள்ளது.

பிளஸ்-1 தேர்வு முடிவுகள் வெளியானவுடன் மாணவ-மாணவிகள் தாங்கள் படித்த பள்ளிகளில் கொடுத்துள்ள செல்போன் எண்ணுக்கு மதிப்பெண் விவரம் குறுஞ்செய்தியாக அனுப்பப்பட்டது. மேலும் அரசு இணையதளத்திலும் முடிவு வெளியிடப்பட்டது. தேர்வு முடிவை காண மாணவர்கள் அந்தந்த பள்ளி முன்பு காலையில் இருந்தே திரண்டனர். அங்கு நோட்டீஸ் பலகையில் ஒட்டப்பட்ட மதிப்பெண் விவரங்களை பார்த்தனர். #Plus1Results
Tags:    

Similar News