செய்திகள்
ஹஸ்ரதுல்லா

டி20 உலகக் கோப்பை- ஸ்காட்லாந்துக்கு எதிராக 190 ரன்கள் குவித்தது ஆப்கானிஸ்தான்

Published On 2021-10-25 15:51 GMT   |   Update On 2021-10-25 15:51 GMT
சார்ஜாவில் நடைபெறும் ஆட்டத்தில் ஸ்காட்லாந்து அணியின் வெற்றிக்கு 191 ரன்கள் இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
சார்ஜா:

டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியின் ‘சூப்பர்-12’ சுற்றில் இன்று இரவு சார்ஜாவில் நடைபெறும் ஆட்டத்தில் ஆப்கானிஸ்தான் அணி, ஸ்காட்லாந்தை எதிர்கொள்கிறது. இப்போட்டியில் டாஸ் வென்ற ஆப்கானிஸ்தான் அணி முதலில் பேட்டிங் செய்தது.

துவக்க வீரர்கள் ஹஸ்ரத்துல்லா, முகமது ஷாஜத் இருவரும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி நல்ல அடித்தளம் அமைத்துக் கொடுத்தனர். அதிரடியாக ஆடிய ஹஸ்ரத்துல்லா 44 ரன்களும், ஷாஜத் 22 ரன்களும் சேர்த்தனர். 

அதன்பின்னர், ரஹ்மதுல்லா குர்பாஸ் -நஜிபுல்லா ஜோடியும், ஸ்காட்லாந்து பந்துவீச்சை அடித்து நொறுக்கியது. ரஹ்மதுல்லா குர்பாஸ் 46 ரன்களும், நஜிபுல்லா 59 ரன்களும், கேப்டன் முகமது நபி 11 ரன்களும் சேர்க்க, ஆப்கானிஸ்தான் அணி 20 ஓவர் முடிவில் 4 விக்கெட் இழப்பிற்கு 190 ரன்கள் குவித்தது.

இதையடுத்து 191 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஸ்காட்லாந்து அணி களமிறங்குகிறது.
Tags:    

Similar News