செய்திகள்
பாராளுமன்ற கூட்டத்தொடர்

பாராளுமன்றத்தில் எதிர்க்கட்சிகள் அமளியால் மக்களின் வரிப்பணம் 133 கோடி ரூபாய் வீண்

Published On 2021-07-31 21:45 GMT   |   Update On 2021-07-31 21:45 GMT
எதிர்க்கட்சிகளின் தொடர் அமளியால் பாராளுமன்றம் கடந்த இரண்டு வாரங்களாக முடங்கியுள்ளது.
புதுடெல்லி:

பாராளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் கடந்த 19-ம் தேதி தொடங்கியது. பெகாசஸ், வேளாண் சட்டங்கள், விலைவாசி உயர்வு உள்ளிட்ட பிரச்சினைகள் பாராளுமன்றத்தின் சுமூக செயல்பாட்டை முடக்கி வருகின்றன.

இந்த பிரச்சினைகளை முன்வைத்து எதிர்க்கட்சிகள் போர்க்கொடி தூக்கி இடையூறு ஏற்படுத்தி வருவதால் இரு அவைகளும் தொடக்க நாளில் இருந்தே முடங்கி வருகின்றன.



இதுதொடர்பாக மத்திய அரசின் சார்பில் விளக்க அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. பாராளுமன்றத்தில் 'விவாதம் நடத்தப்படாது' என அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இந்நிலையில், மத்திய அரசு வெளியிட்டுள்ள தகவலில், மக்களவையில், 54 மணி நேரத்தில் 7 மணி நேரம் மட்டுமே அலுவல் நடந்துள்ளது. மாநிலங்களவையில், 53 மணி நேரத்தில் 11 மணி நேரம் மட்டுமே செயல்பட்டுள்ளது. எதிர்க்கட்சிகளின் தொடர் அமளியால், 107 மணி நேரத்தில் 18 மணி நேரம் மட்டுமே பாராளுமன்றம் செயல்பட்டுள்ளது. இதனால், 133 கோடி ரூபாய் மக்களின் வரிப் பணம் வீணடிக்கப்பட்டுள்ளது என தெரிவித்துள்ளது.
Tags:    

Similar News