தொழில்நுட்பம்
கேலக்ஸி எஸ்20

புதுவித 16 ஜிபி ரேம் சிப்செட் உற்பத்தியை துவங்கிய சாம்சங்

Published On 2020-09-03 06:38 GMT   |   Update On 2020-09-03 06:38 GMT
சாம்சங் நிறுவனத்தின் புதுவித 16 ஜிபி ரேம் சிப்செட்களின் உற்பத்தி பணிகளை துவங்கி இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

சாம்சங் நிறுவனம் இந்த ஆண்டு துவக்கத்தில் 16 ஜிபி ரேம்களின் உற்பத்தியை துவங்க திட்டமிட்டு இருப்பதாக தெரிவித்து இருந்தது. இந்த சிப்செட்கள் மூன்றாம் தலைமுறை 10 நானோமீட்டர் தொழில்நுட்ப முறையில் உருவாகும் என்றும் உற்பத்தி பணிகள் ஆண்டின் இரண்டாவது அரையாணடு காலக்கட்டத்தில் துவங்கும் என தெரிவித்து இருந்தது.

அந்த வகையில் கொரியாவில் உள்ள பியோங்டெக் ஆலையில் புதுவித ரேம்களை உற்பத்தி செய்வதற்கான வசதியை ஏற்படுத்தி இருப்பதாக சாம்சங் தெரிவித்து இருக்கிறது. மொபைல் போன் மாடல்களுக்கென உருவாகும் முதல் 16 ஜிபி ரேம் இது என்பது குறிப்பிடத்தக்கது.



புதிய தொழில்நுட்பம் அதிவேகம் மற்றும் அதிக திறன் வழங்கும் என சாம்சங் தெரிவித்துள்ளது. தற்போதைய தகவல்களின் படி புதிய 16 ஜிபி ரேம் சிப்கள் கேலக்ஸி எஸ்21 மற்றும் இதர உயர் ரக சாம்சங் சாதனங்களில் வழங்கப்படும் என கூறப்படுகிறது. 

மேலும் இந்த சிப்கள் சாம்சங் சாதனங்கள் மட்டுமின்றி மூன்றாம் தரப்பு நிறுவனங்களுக்கும் விற்பனை செய்ய இருப்பதாக சாம்சங் அறிவித்துள்ளது. இதன் காரணமாக புதிய சிப்செட்களை சீன நிறுவனங்கள் மற்றும் எதிர்கால ஆப்பிள் சாதனங்களிலும் எதிர்பார்க்கலாம்.
Tags:    

Similar News