ஆட்டோமொபைல்
பிஎம்டபிள்யூ எம்1000 ஆர்ஆர்

அசத்தல் அம்சங்களுடன் பிஎம்டபிள்யூ எம்1000 ஆர்ஆர் அறிமுகம்

Published On 2020-09-26 08:37 GMT   |   Update On 2020-09-26 08:37 GMT
பிஎம்டபிள்யூ நிறுவனத்தின் புதிய எம்1000 ஆர்ஆர் மோட்டார்சைக்கிள் அசத்தல் அம்சங்களுடன் அறிமுகம் செய்யப்பட்டது.

பிஎம்டபிள்யூ மோட்டராட் நிறுவனம் எம் பிரிவில் தனது முதல் மோட்டார்சைக்கிளை எம்1000 ஆர்ஆர் எனும் பெயரில் அறிமுகம் செய்தது. இது ஸ்டான்டர்டு மாடலுடன் ஒப்பிடும் போது பல்வேறு மாற்றங்களை கொண்டுள்ளது. 

புதிய மாற்றங்களில் குறைந்த எடை கொண்ட பாகங்கள், மேம்பட்ட எலெக்டிரானிக் மற்றும் ஏரோ பேக்கேஜ் உள்ளிட்டவை அடங்கும். பிஎம்டபிள்யூ எம்1000 ஆர்ஆர் எடை எஸ்1000 ஆர் மாடலை விட குறைவு ஆகும். புதிய எம்1000 ஆர்ஆர் மாடலை ரேசிங் மட்டுமின்றி ஸ்டிரீட்-லீகல் பயன்பாடுகளுக்கும் ஏற்றது என பிஎம்டபிள்யூ தெரிவித்து உள்ளது.



பிஎம்டபிள்யூ எம்1000 ஆர்ஆர் மாடலில் 999சிசி இன்-லைன் 4 சிலிண்டர் என்ஜின் வழங்கப்பட்டு உள்ளது. இது 210 பிஹெச்பி பவர், 113 என்எம் டார்க் செயல்திறன் வழங்குகிறது. இத்துடன் 6 ஸ்பீடு யூனிட் வழங்கப்பட்டுள்ளது. இது ஸ்லிப் அசிஸ்ட் மற்றும் பை-டைரக்ஷனல் குவிக்ஷிஃப்டர் உள்ளிட்டவை கொண்டுள்ளது.

சஸ்பென்ஷனிற்கு முன்புறம் 45எம்எம் யுஎஸ்டி போர்க்குகள், பின்புறம் மோனோஷாக் செட்டப் வழங்கப்பட்டு உள்ளது. இரு சஸ்பென்ஷன் யூனிட்களும் அட்ஜஸ்ட் செய்யக்கூடிய வகையில் கிடைக்கிறது. மேலும் இது பிஎம்டபிள்யூ புல் புளோட்டர் ப்ரோ கைன்மேடிக்ஸ் தொழில்நுட்பம் கொண்டுள்ளது.
Tags:    

Similar News