பொது மருத்துவம்
கொரோனா

கொரோனா மாறுபாட்டின் 5 அறிகுறிகள்

Published On 2022-05-13 04:45 GMT   |   Update On 2022-05-13 06:44 GMT
கொரோனா நான்காவது அலை எக்ஸ்.இ என்ற மாறுபாட்டுடன் விஸ்வரூபம் எடுக்க தொடங்கி இருக்கிறது. இந்த வைரஸ் மாறுபாட்டின் 5 முக்கிய அறிகுறிகளை அறிந்து கொள்வது அவசியமானது.
1. தோல் எரிச்சல்: சருமத்தில் அரிப்பு அல்லது நிறமாற்றம் ஏற்படுவதை உணர்ந்தால் அது கொரோனா எக்ஸ்.இ மாறுபாட்டால் பாதிக்கப்படலாம் என்பதற்கான அறிகுறியாக இருக்கலாம். சில சமயங்களில் தோலில் எரிச்சல் ஏற்படும்.

2. வயிற்றுப் பிரச்சினைகள்: மலச்சிக்கல், அசிடிட்டி, வயிற்றுப்போக்கு போன்ற பிரச்சினைகளால் பாதிக்கப்படுகிறீர்களா? இவை பெரும்பாலும் சரியான உணவு பழக்கத்தை பின்பற்றவில்லை என்றால் தோன்றும் பாதிப்புகளாகும். ஆனால் அத்தகைய பிரச்சினைகள் ஏதுமின்றி வயிற்று உபாதைகளை அனுபவித்தால் அது கொரோனா புதிய மாறுபட்டின் அறிகுறியாக இருக்கலாம். இரைப்பை குடல் பாதிப்பும் வைரஸ் மாறுபாட்டின் அறிகுறிகளுள் ஒன்றாக அமையும் என்பது மருத்துவ நிபுணர்களின் கருத்தாக இருக்கிறது.

3. காய்ச்சல்: உடலை தாக்கும் வைரஸிடம் இருந்து நம்மை காப்பாற்றுவதற்காக உடல் மேற்கொள்ளும் தகவமைப்பின் வெளிப்பாடாக காய்ச்சல் உருவாகும். சாதாரண காய்ச்சல் ஓரிரு நாட்களில் சரியாகிவிடும். காய்ச்சல் நீடித்தாலோ, இடைவெளி விட்டு காய்ச்சல் வந்தாலோ பரிசோதனை மேற்கொள்வது அவசியமானது.

4. தொண்டை புண்: சுவாச பாதையில் வைரஸ் கிருமிகளால் பாதிப்பு எற்பட்டால் தொண்டையில் புண் உண்டாகும். இதன் காரணமாக தொண்டையில் வலி, அரிப்பு, சளி போன்றவை ஏற்படும். தொண்டையில் ஏதேனும் மாறுபாட்டை உணர்ந்தால் அதனை அலட்சியமாக கருதாதீர்கள். அதுவும் கொரோனா மாறுபாட்டின் பாதிப்பாகக்கூட இருக்கலாம்.

5. சுவாச பிரச்சினைகள்: கொரோனாவின் முந்தைய வகைகளிலும் மூச்சுத் திணறல் அறிகுறி வெளிப்பட்டது. எக்ஸ்.இ மாறுபாட்டிலும் மூச்சுத்திணறல் பிரச்சினையை எதிர்கொள்ளக்கூடும். எனவே சுவாசிக்கும்போது திடீரென்று மாறுபாட்டை உணர்ந்தாலோ, சில அடி தூரம் நடந்தாலே மூச்சுத்திணறல் பிரச்சினையை எதிர்கொண்டாலோ, உடற்பயிற்சி செய்யும்போது வழக்கத்தை விட பலவீனமாக இருப்பதாக உணர்ந்தாலோ கொரோனா பரிசோதனை செய்து கொள்வது நல்லது.
Tags:    

Similar News