ஆன்மிகம்
குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோவில்

குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோவில் ஆடி கொடை விழா இன்று தொடக்கம்

Published On 2020-07-28 06:44 GMT   |   Update On 2020-07-28 06:44 GMT
குலசேகரப்பட்டினம் முத்தாரம்மன் கோவிலில் ஆடி கொடைவிழா இன்று (செவ்வாய்க்கிழமை) கால்நடும் நிகழ்ச்சியுடன் தொடங்குகிறது.
குலசேகரப்பட்டினம் முத்தாரம்மன் கோவிலில் ஆண்டுதோறும் ஆடி கொடை திருவிழா ஆடி மாதத்தில் சிறப்பாக நடந்து வருகிறது. இந்த ஆண்டு கொரோனா வைரஸ் பரவலை தடுக்கும் வகையில், தமிழக அரசு 144 தடை உத்தரவு பிறப்பித்து உள்ளது. இந்த நிலையில் கோவிலில் ஆடி கொடைவிழா இன்று (செவ்வாய்க்கிழமை) காலையில் கால்நடும் நிகழ்ச்சியுடன் தொடங்குகிறது.

கால் நடும் நிகழ்ச்சி மற்றம் இரவு முளைப்பாளிகை இடுதல் நிகழ்ச்சியும் கோவில் வளாகத்தில் நடைபெற உள்ளது. வருகிற 3-ந்தேதி (திங்கட்கிழமை) தீபாராதனை, 4-ந்தேதி (செவ்வாய்க்கிழமை) கோவில் வளாகத்துக்குள் கும்பம் (கரகம்) புறப்படுதல், அன்று இரவு தீச்சட்டி புறப்படுதல், 5-ந்தேதி (புதன்கிழமை) முளைப்பாளிகை திருக்கோவிலில் வலம் வருதல் உள்ளிட்ட திருவிழா நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளது.

இந்த நிகழ்ச்சிகளை மாவட்ட நிர்வாகம் மற்றும் கோவில் நிர்வாகத்தின் மூலம் உள்ளூர் தொலைக்காட்சி மற்றும் யூ-டியூப் சேனல்கள் மூலமாக ஒளிபரப்ப நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது. கொரோனா வைரஸ் பரவலை தடுக்கும் வகையில் 144 தடை உத்தரவு அமலில் உள்ளதால் இந்த நிகழ்ச்சிகளில் பொதுமக்கள், பக்தர்கள் கலந்து கொள்ள அனுமதி இல்லை.

இவ்வாறு அவர் தெரிவித்து உள்ளார்.
Tags:    

Similar News