உள்ளூர் செய்திகள்
மழையால் மிளகாய் பயிர் சேதம்

மழையால் மிளகாய் பயிர் சேதம் - நிவாரணம் வழங்க விவசாயிகள் கோரிக்கை

Published On 2021-12-02 13:09 GMT   |   Update On 2021-12-02 13:09 GMT
ராமநாதபுரம் மாவட்டத்தில் பெய்து வரும் கன மழையால் இந்த பகுதிஓடைகளில் உள்ள தண்ணீர் மற்றும் கஞ்சம்பட்டி கால்வாயில் வரும் தண்ணீரும் இப்பகுதிகளில் உள்ள விவசாயிகளின் வயல்களில் செடிகளை சூழ்ந்து மழைநீர் தேங்கி உள்ளதால் செடிகள் அழுகி மிகவும் சேதமடைந்து உள்ளது.
சாயல்குடி:

சாயல்குடி அருகே செவல்பட்டி ஊராட்சியில் செவல்பட்டி, முத்துராமலிங்கபுரம், வாலம் பட்டி ஆகிய கிராமங்கள் உள்ளன. இந்த பகுதிகளில் மானாவாரியாக மிளகாய், உளுந்து, கம்பு, சோளம் ஆகிய பயிர்களை விவசாயிகள் விதைத்து விவசாயம் மேற்கொண்டு வருகின்றனர். தற்போது தொடர்ந்து பெய்து வரும் கன மழையால் பயிர்கள் சேத மடைந்து விவசாயிகள் கவலை அடைந்து வருகின்றனர். 

இதுகுறித்து செவல்பட்டி ஊராட்சி தலைவர் சொரிமுத்து கூறுகையில், செவல்பட்டி ஊராட்சியில் சுமார் 500 ஏக்கர் பரப்பளவில் மிளகாய், உளுந்து, சோளம், கம்பு போன்ற பயிர்களை விவசாயிகள் விதைத்தனர், தற்போது செடியாக உள்ள தருணத்தில் ராமநாதபுரம் மாவட்டத்தில் பெய்து வரும் கன மழையால் இந்த பகுதிஓடைகளில் உள்ள தண்ணீர் மற்றும் கஞ்சம்பட்டி கால்வாயில் வரும் தண்ணீரும் இப்பகுதிகளில் உள்ள விவசாயிகளின் வயல்களில் செடிகளை சூழ்ந்து மழைநீர் தேங்கி உள்ளதால் செடிகள் அழுகி மிகவும் சேதமடைந்து உள்ளது. 

விவசாயிகள் ஏக்கருக்கு 30 ஆயிரம் ரூபாய் செலவு செய்து பயிர்கள் தண்ணீரில் மூழ்கி சேதமடைந்ததால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர். எனவே மாவட்ட நிர்வாகம் செவல்பட்டி ஊராட்சியில் உள்ள மழையால் பயிர்கள் சேதம் அடைந்த அளவை கணக்கிட்டு விவசாயிகளுக்கு உரிய நிவாரணம் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.
Tags:    

Similar News