செய்திகள்
காய்கறிகள்

அரியலூரில் காய்கறி விற்பனை மந்தம்

Published On 2021-05-26 11:03 GMT   |   Update On 2021-05-26 11:03 GMT
அரியலூரில் நேற்று 5 கடைகள் திறக்கப்பட்டன. ஆனால் வியாபாரம் எதிர்பார்த்த அளவு நடைபெறவில்லை.
அரியலூர்:

அரியலூரில் காய்கறி விற்பனை மந்தமாக இருந்தது. அரியலூரில் மொத்த காய்கறி கடைகளை திறந்து விற்பனை செய்ய மாவட்ட நிர்வாகம் அனுமதி வழங்கியுள்ளது. அரசு மேல்நிலைப்பள்ளி மைதானத்தில் காலை 5 மணி முதல் 6 மணி வரை மினி லாரிகளில் காய்கறிகளை வாங்கி, தெருக்களில் விற்பனை செய்ய அனுமதி வழங்கபட்டவர்களுக்கு மட்டும் காய்கறிகள் விற்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இதன்படி அங்கு நேற்று 5 கடைகள் திறக்கப்பட்டன. ஆனால் வியாபாரம் எதிர்பார்த்த அளவு நடைபெறவில்லை. மந்தமாகவே இருந்தது.

மேலும் மாவட்ட காவல்துறை சார்பில் ஆதரவற்றவர்களுக்கு உணவுகள் வழங்க மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாஸ்கரன் ஏற்பாடு செய்திருந்தார். இதன்படி அரியலூர் உட்கோட்ட துணை சூப்பிரண்டு மதன், நரிக்குறவர்கள் தங்கி உள்ள இடத்திற்கு சென்று அவர்களுக்கு உணவு பொட்டலங்கள் மற்றும் குடிநீர் வழங்கினார். இதேபோல் பஸ் நிலையம் மற்றும் சாலை ஓரங்களில் வசிக்கும் ஆதரவற்றவர்களுக்கு உணவுகள் வழங்கப்பட்டது.
Tags:    

Similar News