செய்திகள்
புன்னக்காயலில் அம்மா மினி கிளினிக்கை அமைச்சர் கடம்பூர் ராஜூ திறந்து வைத்தபோது எடுத்த படம்.

புன்னக்காயலில் அம்மா மினி கிளினிக்- அமைச்சர் கடம்பூர் ராஜூ திறந்து வைத்தார்

Published On 2021-02-11 10:19 GMT   |   Update On 2021-02-11 10:19 GMT
புன்னக்காயலில் அம்மா மினி கிளினிக்கை அமைச்சர் கடம்பூர் ராஜூ திறந்து வைத்தார்.
ஆறுமுகநேரி:

புன்னக்காயலில் அரசு சுகாதாரத்துறை சார்பில் அம்மா மினி கிளினிக் திறப்பு விழா நடைபெற்றது. விழாவிற்கு தமிழக செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜூ தலைமை தாங்கி கிளினிக்கை திறந்து வைத்தார்.

எஸ்.பி.சண்முகநாதன் எம்.எல்.ஏ., புன்னக்காயல் பங்கு தந்தை பிராங்கிளின் அடிகளார், ஆகியோர் முன்னிலை வகித்தனர். நிகழ்ச்சியில் தூத்துக்குடி தெற்கு மாவட்ட ஜெயலலிதா பேரவை செயலாளர் கே.ஆர்.எம். ராதாகிருஷ்ணன், ஆழ்வார்திருநகரி அ.தி.மு.க. கிழக்கு ஒன்றிய செயலாளர்கே. விஜயகுமார், ஆத்தூர் நகர செயலாளர் சோமசுந்தரம், புன்னக்காயல் கிளை கழக செயலாளர். அலாய்ன்ஸ், யூனியன் கவுன்சிலர் தாமஸ், ஊர் கமிட்டி தலைவர் இட்டோ, மாவட்ட திட்ட அலுவலர் தனபதி, திருச்செந்தூர் உதவி கலெக்டர் தனப்பிரியா, திருச்செந்தூர் தாசில்தார் முருகேசன், சுகாதார துறை உதவி இயக்குநர் போஸ்கோ ராஜா, ஆழ்வார்திருநகரி வட்டார மருத்துவ அலுவலர் பார்த்திபன், ஆத்தூர் வருவாய் அதிகாரி பிளாரன்ஸ் ஜெயராணி, உட்பட பலர் கலந்து கொண்டனர்.

கயத்தாறு வட்டாரப் பகுதியில் சட்டமன்ற நிதி மற்றும் பிற நிதியிலிருந்து கட்டப்பட்ட புதிய கட்டடங்களைதிறந்து வைத்தும், புதிய திருமண மண்டபங்கள் அடிக்கல் நாட்டியும் அமைச்சர் கடம்பூர் ராஜூ தொடங்கி வைத்தார்.கயத்தாறு அருகேயுள்ள திருமங்களக்குறிச்சி, கம்மாபட்டி ஆகிய இரண்டு கிராமத்தில் ரூ.5 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்ட புதிய நிழற்கொடை கட்டிடங்களை அமைச்சர் ரிப்பன் வெட்டி திறந்து வைத்து குத்துவிளக்கு ஏற்றினார்.

இதனை தொடர்ந்து வெள்ளாளன் கோட்டை கிராமத்தில் ஆரம்ப சுகாதார நிலையத்தில் ரூ.25 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்ட புதிய செவிலியர்கள் குடியிருப்பு கட்டிடத்தை திறந்து வைத்தார். பின்னர் வெள்ளாளன்கோட்டையில் ரூ. 33 லட்சம் மதிப்பீட்டில் புதிய திருமண மண்டபம் கட்ட அடிக்கல் நாட்டினார்.

ஆவுடையாபுரம் கிராமத்தில் 14.25 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்ட பள்ளி கட்டிடத்தை திறந்து வைத்தார். மேலும், ரூ. 9.04 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்ட அங்கன்வாடி கட்டிடத்தை திறந்துவைத்து, அங்கு அம்மா நகரும் ரேஷன்கடையை தொடங்கி வைத்தார்.

ராமநாதபுரம், பட்டியூர் கிராமங்களில் அம்மா நகரும் ரேஷன் கடையை தொடங்கி வைத்தார் இந்த நிகழ்ச்சியில் தூத்துக்குடி மாவட்ட திட்ட இயக்குனர் தனபதி, கோவில்பட்டி உதவி கலெக்டர் சங்கரநாராயணன், கயத்தாறு தாசில்தார் பாஸ்கரன், மண்டல துணை தாசில்தார்கள் செல்வகுமார், கருப்பசாமி மற்றும் கட்சி நிர்வாகிகள் கயத்தாறு மேற்கு ஒன்றிய அ.தி.மு.க. செயலாளர் வினோபாஜி.தூத்துக்குடி வடக்கு மாவட்ட அம்மா பேரவை செயலாளர்செ. செல்வகுமார்.

மாவட்ட எம்.ஜி.ஆர்.மன்ற செயலாளர் பூமாரியப்பன். மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் ஆசூர் காளிப்பாண்டியன். கயத்தாறு கிழக்கு ஒன்றிய செயலாளர் வண்டானம் கருப்பசாமி, மாவட்ட அம்மா பேரவை இணைச் செயலாளர்கள் வே.கண்ணன், நீலகண்டன். இளைஞர்அணி செயலாளர் இ.கண்ணன். ஒன்றிய மாணவரணி செயலாளர் நவநீதகிருஷ்ணன், ஒன்றிய தொழில்நுட்ப பிரிவு செயலாளர் பிரபாகரன், தெற்கு இலந்தைகுளம் முன்னாள் பஞ்சாயத்து தலைவர் செல்லையா, பிரான்ஸ், கருப்பசாமி உள்பட பலரும் கலந்து கொண்டனர்.
Tags:    

Similar News