ஆன்மிகம்
சமயபுரம் மாரியம்மன் கோவில்

நாளை மகாளய அமாவாசை: சமயபுரம் கோவிலில் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் ரத்து

Published On 2020-09-16 09:26 GMT   |   Update On 2020-09-16 09:26 GMT
சக்தி ஸ்தலங்களில் மிகவும் பிரசித்தி பெற்ற சமயபுரம் மாரியம்மன் கோவிலில் புரட்டாசி மகாளய அமாவாசையான நாளை(வியாழக்கிழமை) மாரியம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் சாமி புறப்பாடு ரத்து செய்யப்பட்டுள்ளது.
சக்தி ஸ்தலங்களில் மிகவும் பிரசித்தி பெற்றது சமயபுரம் மாரியம்மன் கோவில் ஆகும். இங்கு புரட்டாசி மகாளய அமாவாசையான நாளை(வியாழக்கிழமை) மாரியம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் சாமி புறப்பாடு ரத்து செய்யப்பட்டுள்ளது. கோவிலில் முடி காணிக்கை மற்றும் தரிசன நேரம் காலை 5.30 மணி முதல் மாலை 6 மணி வரை மட்டும் பக்தர்கள் அனுமதிக்கப்படுவார்கள்.

கோவில் சார்ந்த இடங்களில் பக்தர்கள் இரவில் தங்க அனுமதி இல்லை. அரசு வழிகாட்டு நடைமுறைகளை பின்பற்றவேண்டும். 65 வயதிற்கு மேற்பட்டவர்கள், உயர் ரத்த அழுத்தம், சர்க்கரை நோய், சுவாசம் தொடர்பான நோய், இருதய நோய் போன்ற இணை நோய் கொண்டவர்கள், கர்ப்பிணி பெண்கள், 10 வயதிற்கு உட்பட்ட குழந்தைகள், மாற்றுத் திறனாளிகள் ஆகியோர் சாமி தரிசனம் செய்ய வருவதை தவிர்க்க வேண்டும்.

கோவிலுக்குள் தேங்காய், பூ, பழம் கொண்டு வர அனுமதி இல்லை. பக்தர்கள் கண்டிப்பாக முகக்கவசம் அணிந்து வரவேண்டும். நோய் அறிகுறி இல்லாத பக்தர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள் என சமயபுரம் கோவில் இணை ஆணையர் அசோக்குமார் தெரிவித்துள்ளார்.
Tags:    

Similar News