உள்ளூர் செய்திகள்
கோப்புபடம்

திருப்பணிக்கான நிதிக்கு ஜி.எஸ்.டி. வரியை ரத்து செய்ய வேண்டும் - பூசாரிகள் கோரிக்கை

Published On 2022-05-06 07:46 GMT   |   Update On 2022-05-06 07:46 GMT
தமிழகத்தில் 2,500க்கும் மேற்பட்ட கிராமப்புற கோவில்கள் உள்ளன. இந்த கோவில்களில் போதிய வருமானம் இல்லாததால், அன்றாட பூஜைகளுக்கு கூட பொதுமக்கள், பக்தர்களின் பங்களிப்பை நம்பியுள்ளன.
பல்லடம்:

கோவில் திருப்பணிக்கு வழங்கப்படும் நிதிக்கு ஜி.எஸ்.டி. வரி விதிப்பை ரத்து செய்ய வேண்டும் என பூசாரிகள் நலச் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது. 

இதுகுறித்து தமிழ்நாடு கோவில் பூசாரிகள் நலச் சங்கத்தின் மாநில தலைவர் வாசு கூறியதாவது:- 

தமிழகத்தில் 2,500க்கும் மேற்பட்ட கிராமப்புற கோவில்கள் உள்ளன. இந்த கோவில்களில் போதிய வருமானம் இல்லாததால், அன்றாட பூஜைகளுக்கு கூட பொதுமக்கள், பக்தர்களின் பங்களிப்பை நம்பியுள்ளன. 

கோவில்களில் திருப்பணி மேற்கொள்ள இந்து சமய அறநிலைய துறை சார்பில், 2 லட்சம் ரூபாய் வழங்கப்படுகிறது. திருப்பணி நிதிக்கு ஜி.எஸ்.டி., வரி, 12 சதவீதம் விதிக்கப்படுகிறது.

இதனால், 24 ஆயிரம் ரூபாய் வரி போக மீத தொகை தான் திருப்பணிக்கு கிடைக்கிறது. எனவே கிராமப்புற கோவில் திருப்பணி நிதிக்கான ஜி.எஸ்.டி. வரி விதிப்பை மத்திய அரசு ரத்து செய்ய வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.
Tags:    

Similar News