செய்திகள்
கொரோனா வைரஸ்

கொரோனா நோய் தொற்று அதிகரிப்பு- மதுரை ஆஸ்பத்திரிகளில் படுக்கைகள் நிரம்பியது

Published On 2021-05-12 10:33 GMT   |   Update On 2021-05-12 10:33 GMT
மதுரை மாவட்டத்தில் ராஜாஜி மருத்துவமனை உள்பட 7 அரசு மருத்துவமனைகள் உள்ளன. இங்கு தற்போது வரையில் 302 படுக்கை வசதிகள் மட்டுமே காலியாக உள்ளது.
மதுரை:

மதுரை மாவட்டத்தில் கொரோனா 2-வது அலை வேகமாக பரவுகிறது. இதன் காரணமாக தினமும் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் நோய்த் தொற்றுக்கு இலக்காகி வருகின்றனர்.

மதுரையில் நேற்று மட்டும் ஒரே நாளில் 1024 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உள்ளனர். இருந்தபோதிலும் 847 பேருக்கு நோய் குணமாகி பத்திரமாக வீடு திரும்பி உள்ளனர்.

இதற்கிடையே மதுரையில் ஒரே நாளில் 14 பேர் கொரோனாவுக்கு பலியாகி உள்ளனர். இதன் வாயிலாக மதுரை மாவட்டத்தில் ஒட்டு மொத்தமாக பலியானோரின் எண்ணிக்கை 607ஆக உயர்ந்துள்ளது. மதுரை அரசு மற்றும் தனியார் ஆஸ்பத்திரிகளில் இன்று வரை 6,262 பேருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

மதுரை மாவட்டத்தில் 7 கொரோனா சிறப்பு வார்டுகள் உள்ளன. இங்கு 1,918 படுக்கை வசதிகள் உண்டு. இதில் 1,616 பேர் அனுமதிக்கப்பட்டு சிகிச்சையில் இருந்து வருகின்றனர்.

மதுரை மாவட்டத்தில் ராஜாஜி மருத்துவமனை உள்பட 7 அரசு மருத்துவமனைகள் உள்ளன. இங்கு தற்போது வரையில் 302 படுக்கை வசதிகள் மட்டுமே காலியாக உள்ளது.

மேலும் 17 தற்காலிக கொரோனா சிறப்பு மையங்களில் 2,115 படுக்கை வசதிகள் உள்ளன. இதில் 1,318 படுக்கைகள் மட்டுமே காலியாக உள்ளது.

அரசு மருத்துவமனைகளில் ஆக்சிஜன் வசதி கொண்ட படுக்கை 852-ல் 418 நோயாளிகள் சிகிச்சையில் உள்ளனர். இங்கு 296 படுக்கைகள் மட்டுமே காலியாக உள்ளன.

தனியார் மருத்துவமனைகளில் ஆக்சிஜன் வசதி கொண்ட படுக்கை 1,321-ல் 415 நோயாளிகள் சிகிச்சை பெற்று வருகின்றனர். 829 படுக்கைகள் காலியாக உள்ளன.

மதுரை மாவட்டத்தில் ஒட்டுமொத்தமாக 2,272 படுக்கை வசதிகளுடன் இயங்கி வரும் தனியார் மருத்துவமனைகளில் தற்போது வரையில் 1,180 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். 1,092 காலி படுக்கைகள் உள்ளன.

மதுரை மாவட்டத்தைப் பொருத்தவரை நாள் ஒன்றுக்கு 8 ஆயிரத்துக்கும்அதிகமானோருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்படுகிறது.

இதுவரையில் 10,59,687 பேருக்கு பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு உள்ளது.

வீட்டில் 2,669 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.


Tags:    

Similar News