உள்ளூர் செய்திகள்
ஆத்தூரில் முறிந்து விழுந்த பப்பாளி மரங்களை படத்தில் காணலாம்.

ஆத்தூரில் சூறைக்காற்றில் முறிந்து விழுந்த பப்பாளி மரங்கள்

Published On 2022-05-06 10:07 GMT   |   Update On 2022-05-06 10:07 GMT
ஆத்தூரில் சூறைக்காற்றில் முறிந்து விழுந்த பப்பாளி மரங்களை இழப்பீடு வழங்க விவசாயிகள் கோரிக்கைவிடுத்துள்ளனர்.
ஆத்தூர்:

சேலம் உள்ளிட்ட மாவட்டங்களில் வெப்பச்சலனம் காரணமாக  கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை மையம் தெரிவித்திருந்தது. நேற்று மாலையில் ஆத்தூர் மற்றும் அம்மம்பாளையம், காட்டுக்கோட்டை உள்ளிட்ட பகுதிகளில் திடீரென சூறாவளி காற்று வீசியது.  

சேலம் மாவட்டம் ஆத்தூர் நகராட்சிக்குட்பட்ட 33வது வார்டு பகுதியில் நூற்றுக்கும் மேற்பட்ட ஏக்கரில் வாழை, பப்பாளி, தேக்கு, உள்ளிட்டவை பயிரிட்டுள்ளனர். பலத்த காற்றினால்  தெற்காடு பைத்தூர் மலையோட்டிய பகுதிகளில் விவசாயிகள் பயிரிட்டு அறுவடை காத்திருந்த பப்பாளி மரங்கள் முறிந்து விழுந்து சேதமாகின.
 
இதனால் விவசாயிகளுக்குச வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளதாக வேதனை தெரிவிக்கின்றனர் மேலும் பப்பாளி காய் துளிர்விடும் மரங்களையும் சூறாவளி காற்று விட்டு வைக்காததால் அவைகளும் முறிந்து சேதமடைந்தன. இதனால் விவசாயிகள் செய்வதறியாது திகைத்து வருகின்றனர்.  

இதுபற்றி விவசாயிகள் கூறுகையில், திடீரென வீசிய சூறாவளி காற்றால் நிலத்தில் பயிரிட்ட 250-க்கும் மேற்பட்ட பப்பாளி மரங்கள் முறிந்து விழுந்தன. ஆத்தூர் வட்டாரப் பகுதிகளில் சுமார் 600-க்கும் மேற்பட்ட மரங்கள் முறிந்து விழுந்துள்ளன. இதனால்  விவசாயிகளுக்கு பெரிய அளவில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. எனவே இதற்கு அரசு உரிய இழப்பீடு வழங்கவேண்டும் என்றார்.
Tags:    

Similar News